Kathir News
Begin typing your search above and press return to search.

கோவில் நிலத்தை ஆக்கிரமித்து விற்பதை தடுக்க பட்டாவில் தடை குறியீடு சேர்ப்பு!

கோவில்களுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து அதனை போலீயான ஆவணங்களை தயார் செய்து விற்பதை தடுக்க சர்வே எண் வாரியாக பட்டாக்களில் தடை குறியீட்டை சேர்க்கும் பணியை வருவாய்துறை துவக்கி வைத்துள்ளது.

கோவில் நிலத்தை ஆக்கிரமித்து விற்பதை தடுக்க பட்டாவில் தடை குறியீடு சேர்ப்பு!
X

ThangaveluBy : Thangavelu

  |  2 Nov 2021 5:47 AM GMT

கோவில்களுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து அதனை போலீயான ஆவணங்களை தயார் செய்து விற்பதை தடுக்க சர்வே எண் வாரியாக பட்டாக்களில் தடை குறியீட்டை சேர்க்கும் பணியை வருவாய்துறை துவக்கி வைத்துள்ளது.

தமிழகத்தில் 44 ஆயிரத்து 285 கோவில்கள் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 44 ஆயிரத்து 285 கோவில்கள் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவில்களுக்கு ஏராளமானோர்கள் தானமாக கொடுத்த நிலங்கள், கட்டடங்கள் உள்ளது. இதனை அந்தந்த பகுதி மக்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இது போன்ற நிலங்களை ஆக்கிரமித்தவர்களிடம் இருந்து சொத்துக்களை மீட்கும் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை முடுக்கி விட்டுள்ளது.


இந்நிலையில் கோவில் சொத்துக்கள், ஆக்கிரமிப்பாளர்களால் விற்கப்படுவதை தடுக்கும் வகையில் அவற்றின் பட்டாக்களில் சிறப்பு குறியீட்டை ஏற்படுத்தலாம் என இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் வருவாய்த் துறைக்கு ஆலோசனை கூறினர். அதன் அடிப்படையில் வருவாய்த்துறையினர் சில மாறுதல்களை துவக்கியுள்ளனர். இதன்படி சென்னையில் வடபழனி ஆண்டவர் கோவிலுக்கு சொந்தமான நிலங்களின் பட்டாக்களில் சிறப்பு குறியீடுகள் தற்போது இணைக்கப்பட்டுள்ளது. அதில் இந்த சர்வே எண் தடை விதிக்கப்பட்டுள்ளது என்ற வாசகம் அடங்கிய குறியீடு இடம் பெற்றுள்ளது. முதலில் நகர்புற பகுதிகளில் முடிந்த பின்னர் தமிழகம் முழுவதும் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. இது போன்று செய்வதால் கோவில் இடங்களை யாரும் தவறுதலாக விற்பனை செய்ய முடியாது. வாங்குபவர்களும் உஷாராப்படுத்தப்படுவார்கள்.

Source, Image Courtesy: Dinamalar


Next Story
கதிர் தொகுப்பு
Trending News