Kathir News
Begin typing your search above and press return to search.

உலக சுற்றுலா தினம் : ஆதரவற்ற முதியோர்கள் ஆதியோகியை இன்று கண்குளிர தரிசித்து இன்புற்றனர் !

உலக சுற்றுலா தினம் : ஆதரவற்ற முதியோர்கள் ஆதியோகியை  இன்று கண்குளிர தரிசித்து இன்புற்றனர் !
X

DhivakarBy : Dhivakar

  |  27 Sept 2021 1:23 PM


உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு கோவையில் உள்ள ஆதரவற்ற முதியோர்கள் ஆதியோகியை இன்று கண்குளிர தரிசித்து இன்புற்றனர்.




தமிழ்நாடு சுற்றுலா துறை சார்பில் உலக சுற்றுலா தினத்தன்று பல்வேறு நிகழ்ச்சிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டு கோவை அரசு ஆதரவற்ற முதியோர் இல்லங்களில் வசிக்கும் சுமார் 60 பேர் ஒரு நாள் இன்ப சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்.

சுற்றுலாவின் ஒரு பகுதியாக, கோவையின் முக்கிய ஆன்மீக தலங்களில் ஒன்றாக விளங்கும் ஈஷாவிற்கு அவர்கள் வருகை தந்தனர். சாரல் மழையுடன் கூட ரம்மியமான காலை பொழுதில் ஆதியோகியை கண்குளிர தரிசித்து மகிழ்ந்தனர். பின்னர், தியானலிங்கம் மற்றும் லிங்க பைரவியையும் தரிசனம் செய்தனர்.

இந்த சுற்றுலாவை கோவை மாவட்ட சுற்றுலா துறையும், ஸ்கால் கிளப்பும் (SKAL Club) இணைந்து ஏற்பாடு செய்தன.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News