பயிர்களுக்கு இழப்பீடு: விவசாய சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை !
திருவாரூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடியில் மழையால் முளைத்த பயிர்களுக்காவது உரிய இழப்பீட்டை தமிழக அரசு கொடுக்க வேண்டும் என்று விவசாய சங்கம் வேதனையுடன் கோரிக்கை வைத்துள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்படடுள்ளது. அதில் 80 சதவீதம் அறுவடை செய்யப்பட்டுவிட்டது. மீதம் 30 சதவீதம் அறுவடை நடைபெற்று வருகிறது.
By : Thangavelu

இந்நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாகவே விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த பல்வேறு இடங்களில் குறுவைப்பயிர்கள் மழையால் சேதமடைந்துள்ளது. அதில் சில இடங்களில் வயல்களிலேயே முளைக்கத் தொடங்கிவிட்டது.
இதனால் திருவாரூர் மாவட்டம், மாவூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் காவிரி விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பார்வையிட்டார். இதன் பின்னர் அவர் பேசும்போது, அரசு உண்மையாக கணக்கெடுத்து உரிய நிவாரணத்தை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார்.
Source, Image Courtesy: Puthiyathalamurai