ஐயனார் கோயில் எதிரில் மருத்துவ கழிவுகள் குவிப்பதா ? கொதித்தெழும் இந்து முன்னணி !
By : Dhivakar
சேலம் அருகில் அய்யனார் கோயில் முன்பு மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுவருவதாக புகார் எழுந்துள்ளது. இது அக்கோயில் பக்தர்களை வருத்தமடையச் செய்துள்ளது.
சேலம் மாவட்டத்தில், ஆனைகல் பாளையத்தில், இருநூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த அய்யனார் கோயில் இருந்து வருகிறது. இக்கோயிலில் அப்பகுதி மக்கள் வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் அக்கோயிலுக்கு எதிரில் இருக்கும் நிலத்தில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுவருவதாக புகார் எழுந்துள்ளது. இது அப்பகுதி இந்துக்களை வருத்தமடைய செய்துள்ளது.
இச் செய்தி அறிந்த இந்து முன்னணி அமைப்பினர். இதை எதிர்த்து அதிகாரிகளிடம் புகார் மனு அளித்துள்ளனர். இது குறித்து இந்து முன்னணி வெளியிட்ட செய்தி குறிப்பில் : சேலம் மாவட்டம் ஆனைகல் பாளையம் பகுதியில் சுமார் 200 ஆண்டுங்கள் பழைமை வாய்ந்த அய்யனார் சுவாமி ஆலயத்திற்கு முன் சட்ட விரோதமாக மருத்துவ கழிவுகள் குவிக்கப்பட்டு வருவதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்ப்படுகிறது.
இதனை கண்டித்து இந்துமுன்னணி புகார் மனு.
சேலம் மாவட்டம் ஆனைகல் பாளையம் பகுதியில் சுமார் 200 ஆண்டுங்கள் பழைமை வாய்ந்த அய்யனார் சுவாமி ஆலயத்திற்கு முன் சட்ட விரோதமாக மருத்துவ கழிவுகள் குவிக்கப்பட்டு வருவதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்ப்படுகிறது.
— Hindu Munnani (@hindumunnaniorg) December 9, 2021
இதனை கண்டித்து இந்துமுன்னணி புகார் மனு. #இந்துமுன்னணி#சேலம் pic.twitter.com/17PCPfV0sa