Kathir News
Begin typing your search above and press return to search.

கள்ளழகர் கோவில் நிலம்: தனது என்று கூறி 70 லட்சம் மோசடி செய்த கும்பல்!

கள்ளழகர் கோவில் நிலத்தை தன்னுடையது என்று கூறி 70 லட்சத்தை மோசடி செய்து இருக்கிறது 6 பேர் கொண்ட கும்பல்.

கள்ளழகர் கோவில் நிலம்: தனது என்று கூறி 70 லட்சம் மோசடி செய்த கும்பல்!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  6 Nov 2022 8:25 AM GMT

மதுரை கள்ளழகர் கோவில் நிலத்தை காட்டி முன் பணமாக 70 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆறு பேர் கொண்ட கும்பலிடம் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றார்கள். விருதுநகர் சூலங்கரை மீது வீர பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ரங்கநாயகி, இவரது தம்பி சூரிய நாராயணன் சிங்கப்பூரில் தொழில் செய்கிறார். அவர் அனுப்பும் பணத்தில் ரங்கநாயகி இரண்டு இடங்களை வாங்கினார்.


ரங்கநாயகியும் அவரது சகோதரருமான வீர பாண்டியனை 2020 சூலக்கரை வீட்டில் ஓய்வு நீதிபதி எனக் கூறிக்கொண்டு திண்டுக்கல் மாவட்டம் பழனி சிவ கிரி பட்டியைச் சேர்ந்த பத்மநாதனை சந்தித்தார். அவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்வதாகவும், மதுரை வண்டியூரில் 12 ஏக்கர் 70 சென்ட் நிலம் தனியார் அறக்கட்டளை நிறுவனத்திற்கு சொந்தமாக உள்ளது என்றும் அதன் நிர்வாகிகளான நபர் தனக்கு தெரியும் என்று கூறியுள்ளார். அந்த நிலத்தை வாங்கிக் கொள்ள ஆசை காட்டினார். இதன் காரணமாக 2021 ஜனவரியில் அந்த சொத்துக்கு 34 கோடி 92 லட்சத்து 50 ஆயிரம் என்று கிரையம் பேசி 50 லட்சத்தை பெற்றுக் கொண்டனர்.


சில நாட்களுக்கு கழித்து 20 லட்சத்தை பெற்றுக் கொண்டனர். 70 லட்சத்தையும் பெற்றுக் கொண்டு இந்த நிலத்தை பதிவு செய்ய தராமல் ஏமாற்று வந்திருக்கிறார்கள். சந்தேகம் அடைந்த ரங்கநாயகி விசாரித்த போது அந்த நிலம் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மதுரை கள்ளழகர் கோவிலுக்கு சொந்தமான இடம் என்று தெரிய வந்து இருக்கிறது. மேலும் படத்தை திரும்ப கேட்டுப் பொழுது திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகவும், மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் வழக்கு ஒன்று தாக்கல் செய்து இருக்கிறார்கள்.

Input & Image courtesy: Dinamalar News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News