Kathir News
Begin typing your search above and press return to search.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் செயல்பாடுகள் தொடங்கியது - விமர்சனங்களை கடந்து இலக்கை நோக்கி முன்னேறும் மத்திய அரசின் திட்டம்!

All Madurai AIIMS seats taken, staff to be hired in a month

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் செயல்பாடுகள் தொடங்கியது - விமர்சனங்களை கடந்து இலக்கை நோக்கி முன்னேறும் மத்திய அரசின் திட்டம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  1 Feb 2022 3:41 PM GMT

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஒதுக்கப்பட்ட 50 எம்பிபிஎஸ் இடங்களும் கடந்த வாரம் முடிவடைந்த முதல் கட்ட கவுன்சிலிங்கின் போது நிரப்பப்பட்டுவிட்டதாக நிர்வாக இயக்குநர் தெரிவித்தார். ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில், தற்காலிகமாக வகுப்புகள் தொடங்கப்படவுள்ளது.

உடற்கூறியல், உடலியல், உயிர்வேதியியல் மற்றும் சமூக மருத்துவம் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு ஒரு மாதத்தில் முடிக்கப்படும், என நிர்வாக இயக்குனர் ஹனுமந்த ராவ் தெரிவித்துள்ளார்.

மதுரை தோப்பூரில் பணிகள் முடியும் வரை தற்காலிக வளாகத்திலேயே வகுப்புகள் நடத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஜனவரி 13ஆம் தேதி தெரிவித்தார். சுகாதாரத் துறை செயலர் ஜே. ராதாகிருஷ்ணன், கடந்த ஜனவரி 25-ஆம் தேதி, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் செயலர் மற்றும் மதுரை எய்ம்ஸ் நிர்வாக இயக்குநர் ஆகியோருக்குக் கடிதம் எழுதி, ஆசிரியர் ஆட்சேர்ப்பை விரைவுபடுத்த வலியுறுத்தினார்.

மதுரை எய்ம்ஸின் கல்வித் திட்டத்தை ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நடத்தலாம். ஆண்டுக்கு 50 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.

ஆய்வகங்கள் மற்றும் பிற வசதிகள் தொடர்பான செலவுகளை மத்திய அரசே ஏற்க வேண்டும் என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. ஜனவரி 28 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ஒரு டோஸ் கோவிட் தடுப்பூசியை எடுத்திருக்க வேண்டும். சேர்க்கையின் போது தடுப்பூசி சான்றிதழை ஜிப்மரில் சமர்ப்பிக்க வேண்டும். ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள எய்ம்ஸ் மங்களகிரியின் பேராசிரியர்கள் முதல் சில நாட்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை நடத்துவார்கள். ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் புதிதாக கட்டப்பட்டுள்ள விடுதியில் மாணவர்கள் தனிப் பிரிவில் தங்க வைக்கப்படுவர்கள்.

ராமநாதபுரத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், முதற்கட்டமாக தோப்பூரில் மருத்துவக் கல்லூரி, விடுதி, பணியாளர்கள் குடியிருப்பு கட்டடங்கள் கட்டப்படும். பின்னர் மருத்துவமனை பணிகள் தொடங்கும். இன்னும் ஆறு மாதங்களில் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என்றார் ராவ்.








Next Story
கதிர் தொகுப்பு
Trending News