புயலால் இவை எல்லாம் சேதமடையும்.. எச்சரிக்கை விடுத்த அமைச்சர்.!
புயலால் இவை எல்லாம் சேதமடையும்.. எச்சரிக்கை விடுத்த அமைச்சர்.!
By : Kathir Webdesk
வங்கக்கடலில் உருவான நிவர் புயல் இன்று இரவு மாமல்லபுரம், காரைக்கால் இடையே கரையை கடக்கிறது. இந்த சமயத்தில் காற்று பயங்கரமாக அடிக்கக்கூடும், மற்றும் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார். சென்னை எழிலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், “தாழ்வான பகுதிகள் மற்றும் குடிசை வீடுகளில் வசிக்கின்ற மக்கள் முகாம்களில் தங்க வைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
மேலும், புயலின் மையப்பகுதி நகர்ந்த பிறகு காற்றின் வேகம் மிகவும் அதிகரிக்கும். இதனால் மின் கம்பங்கள், பயிர்கள், குடிசை வீடுகள் சேதம் அடைய வாய்ப்புள்ளது. இது போன்ற அபாயகரமான சமயங்களில் பொதுமக்கள் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும். மேலும், வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் 4 ஆயிரத்து 233 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முகாம்களில் 13 லட்சம் பேர் தங்கவைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக 987 முகாம்கள் திறக்கப்பட்டு 24 ஆயிரத்து 166 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக ராணுவத்தினர் சென்னை வர உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.