'நம்மை போன்று அனைத்து உரிமைகளும் மாற்றுத்திறனாளிகளுக்கும் உண்டு' - ஆளுநர் ஆர்.என்.ரவி
By : Thangavelu
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து உள்ளார். அதன்படி நேற்று (ஜூன் 19) தூத்துக்குடி மாவட்டத்தில் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு தென்காசிக்கு சென்றார். அங்கு தென்காசி மாவட்டம், கோவிந்தபேரியில் பத்மஸ்ரீ விருது பெற்ற ஷோகோ கார்ப்பரேசன் நிறுவனர் ஸ்ரீதர்வேம்புவை சந்தித்து கலந்துரையாடினார். அதனை தொடர்ந்து அவர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின்னர் இரவு அரசு விடுதியில் ஓய்வு எடுத்தார்.
இந்நிலையில், இன்று காலை தென்காசி ஆயக்குடியில் உள்ள அமர்சேவா சங்கத்தின் 40வது ஆண்டு விழா மற்றும் புதிய கட்டிட திறப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். அப்போது அமர்சேவா சங்கத்தின் செயலாளர் சங்கரராமன் அனைவரையும் வரவேற்றார். மேலும், அமர்சேவா சங்கத்தில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியவர்களுக்கு ஆளுநர்களுக்கு ஆர்.என்.ரவி பாராட்டி கவுரவித்தார். இதில் ஆளுநர் பேசியதாவது: தென்காசி மாவட்டத்திற்கு மட்டுமின்றி இந்திய அளவில் மிகச்சிறந்த எதிர்காலம் உள்ளது. இங்கு அமைந்திருக்கும் அமர்சேவா சங்கம் மனித நேயத்தை மக்களுக்கு எடுத்து கூறுகிறது. சமூகத்தை பொறுத்தவரையில் நீண்டகாலமாகவே எனக்கு நடக்க முடிகிறது. என்னால் என்னுடைய வேலையை செய்ய முடிகிறது.
இது போதும் என்கின்ற நினைப்புகளில் மக்கள் உள்ளனர். இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. மாற்றுத்திறனாளி மனிதர்களையும் மதிக்க வேண்டும். அவர்களுக்கும் தங்களால் இயன்றதை செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கும் நம்மை போன்று அனைத்து உரிமைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் இச்சமுதாயத்தில் உள்ளது. அமர்சேவா சங்கத்தின் தலைவரான ராமகிருஷ்ணன் வாழ்நாள் முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்காக அர்ப்பணித்துள்ளார். அவரது சேவை மிக, மிக பாராட்டத்தக்கது. அவரை போன்று பலர் முன்மாதிரியாக திகழ்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டும். இவரது சேவைகளுக்காக பத்மஸ்ரீ விருதும் கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Source, Image Courtesy: Maalaimalar