Kathir News
Begin typing your search above and press return to search.

ஆம்பூர்: தோல் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழப்பு.. இரண்டு பேர் கவலைக்கிடம்.!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள தோல் தொழிற்சாலையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், மற்ற 2 பேர் கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆம்பூர்: தோல் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழப்பு.. இரண்டு பேர் கவலைக்கிடம்.!
X

ThangaveluBy : Thangavelu

  |  15 Jun 2021 3:40 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள தோல் தொழிற்சாலையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், மற்ற 2 பேர் கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆம்பூர் அடுத்துள்ள பெரியவரிகத்தில் ஆலை கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது இந்த சம்பவம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் கூலி தொழிலாளி ரத்தினம் என்பவர் மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளதாகவும், மற்றொரு தொழிலாளி பிரசாத் என்பவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News