Kathir News
Begin typing your search above and press return to search.

சர்ச்சைக்குள்ளான அம்மா உணவகத்தின் பெயர் பலகை ஒரே இரவில் அகற்றம்!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்த அம்மா உணவகம் தமிழகம் முழுவதும் சுமார் 700 இடங்களில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இதன் பின்னர் ஆட்சி மாறியதும் திமுகவினர் கருணாநிதி புகைப்படங்களை இணைத்து அம்மா உணவகத்தின் பெயர் பலகையை வைத்து வருவதை காணமுடிகிறது.

சர்ச்சைக்குள்ளான அம்மா உணவகத்தின் பெயர் பலகை ஒரே இரவில் அகற்றம்!

ThangaveluBy : Thangavelu

  |  21 Nov 2021 8:19 AM GMT

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்த அம்மா உணவகம் தமிழகம் முழுவதும் சுமார் 700 இடங்களில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இதன் பின்னர் ஆட்சி மாறியதும் திமுகவினர் கருணாநிதி புகைப்படங்களை இணைத்து அம்மா உணவகத்தின் பெயர் பலகையை வைத்து வருவதை காணமுடிகிறது.

அந்த வகையில் மதுரையில் உள்ள அம்மா உணவகத்தின் பெயர் பலகையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா புகைப்படங்களுடன், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி படமும் இடம் பெற்றிருந்தது. இதற்கு அதிமுகவினர் சமூக வலைதளங்களில் கண்டனங்களை பதிவிட்டு வந்தனர். இதற்கு உள்ளூர் திமுக பிரமுகர்கள் கருணாநிதி படத்தை வைத்தாக மாநகராட்சி தகவல் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், மதுரை மாநகராட்சி ஒரே இரவில் சர்ச்சைக்குள்ளான பெயர் பலகையை அகற்றி உள்ளது. இதனை அதிமுக ஐடிவிங்கை சேர்ந்தவர்கள் வரவேற்று கமெண்ட் செய்து வருவதை காணமுடிகிறது.

Source, Image Courtesy: Kumudam



Face Book


Next Story
கதிர் தொகுப்பு
Trending News