அம்ருத் 2.0 திட்டத்தில் ₹2,113 கோடி நிதி ஒதுக்கீடு: மத்திய அரசு துவக்கம்!
அம்ருத் 2.0 திட்டத்தில் ₹2,113 கோடி நிதி ஒதுக்கீடு மத்திய அரசு துவக்கியது.
By : Bharathi Latha
அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் மூன்று மாநகராட்சிகளின் பாதாள சாக்கடை திட்ட பணிகள், எட்டு நகராட்சிகளின் குடிநீர் திட்ட பணிகள் மேற்கொள்ள சுமார் 2,113 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் ஒன்றாம் தேதி மத்திய அரசு இந்து திட்டத்தை துவங்கி வைத்ததும் குறிப்பிடத்தக்கது. நாட்டின் அனைத்து நகரங்களுக்கும் குடிநீர் ஆதாரப் பாதுகாப்பில் வழங்குவது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகவும் இருந்து வருகிறது. தமிழகத்திற்கு இன் திட்டத்தின் கீழ் சுமார் 4935 நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் நிதி உதவியுடன் மாநில அரசும் நிதி உள்ளாட்சிகளின் பங்கு ஆகியவற்றை சேர்த்து 15,000 கோடி ரூபாய்க்கு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள பணிகளை நான்காண்டுகளில் செயல்பட வேண்டும். தமிழகத்தில் தேர்வு செய்யப்பட்ட பணிகளுக்கு தற்போது அரசாணை வெளியிடப்பட்டு இருக்கிறது. சேலம் நகரில் 548 கோடி, கோவை 177 கோடி புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் 279.05 கோடி ரூபாய் என்று 1004.34 கோடி பாதாள சாக்கடை திட்டம் ஏற்படுத்த மாநில அரசு முடிவு எடுத்துள்ளது.
அதேபோல பள்ளிபாளையம், ராணிப்பேட்டை, கூத்தலை, பூஞ்சைப்புழியும்பட்டி, நாகப்பட்டினம், சத்தியமங்கலம் நகராட்சிகளில் குடிநீர் திட்ட பணிகள் மேற்கொள்ள சுமார் 316.50 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக அரசாணை நகராட்சி நிர்வாகம் சார்பில் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் நேற்று வெளியிட்டு இருக்கிறார்.
Input & Image courtesy: Dinamalar News