அந்தமான் பகுதியில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி.!
24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்புள்ளது எனவும் கூறியிருந்தது.
By : Thangavelu
தமிழகத்தில் வெப்பம் அதிகரித்து வரும் சூழ்நிலையில், தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் நேற்று தகவல் வெளியிட்டிருந்தது.
அதனை தொடர்ந்து 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்புள்ளது எனவும் கூறியிருந்தது.
இந்நிலையில், தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இவை கடந்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறுவதற்கு வாய்ப்புள்ளது.
தற்பொழுது காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் மீனவர்கள் 3 நாட்களுக்கு வங்க கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பயங்கர காற்று வீசக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. மீனவர்கள் முன்னெச்சரிக்கையாக இருக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.