புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுதுங்கள்.. மாணவர்களுக்கு சலுகை வழங்கிய அண்ணா பல்கலைக்கழகம்.!
கொரோனா தொற்று காரணமாக கடந்த முறை செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைன் வாயிலாக அண்ணாபல்கலைக்கழகம் நடத்தியிருந்தது. தற்போது இந்த முடிவை கைவிட்டுள்ளது.
By : Thangavelu
வரும் கல்வி ஆண்டில் நடைபெற உள்ள செமஸ்டர் தேர்வை, மாணவர்கள் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதிக் கொள்ளலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா தொற்று காரணமாக கடந்த முறை செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைன் வாயிலாக அண்ணாபல்கலைக்கழகம் நடத்தியிருந்தது. தற்போது இந்த முடிவை கைவிட்டுள்ளது.
பொறியியல் படித்துவரும் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வானது மே மாதம் நடைபெற உள்ளது. கொரோனா தொற்று காரணமாக கடந்த முறை பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட மென்பொருள் வழியாக மாணவர்கள் ஆன்லைன் வழியில் தேர்வு எழுதினர்.
இந்நிலையில், தற்போது ஆன்லைன் முறையை கைவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து வருகின்ற செமஸ்டர் தேர்வின்போது மாணவர்கள் புத்தகத்தைப் பார்த்து எழுதி கொள்ளலாம் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்புக்கு மாணவர்கள் வரவேற்றுள்ளனர். கொரோனா காரணமாக சரிவர பாடங்கள் நடத்தப்படாமல் இருந்தநிலையில், அண்ணா பல்கலைக்கழகம் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பு மாணவர்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.