திமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏ'க்களின் மொத்த சொத்து மதிப்பு 2 லட்சம் கோடி ரூபாய் - தமிழக அரசியலை புரட்டிப்போடும் அண்ணாமலை!
By : Kathir Webdesk
ஏப்ரல் முதல் வாரத்தில் திமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களின் முழு சொத்துப்பட்டியலை வெளியிட உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
கடந்த 75 ஆண்டுகளாக எந்த அரசியல்வாதியும் செய்யாததை ஏப்ரல் முதல் வாரத்தில் செய்யப்போவதாக அண்ணாமலை கூறினார்.
ரஃபேல் வாட்ச்சுக்கான ரசீது மட்டுமல்லாமல் ஐபிஎஸ் அதிகாரியாக தாம் வேலை பார்த்தபோது பெற்ற ஊதியம், அதற்கான செலவு விபரங்கள், கிரெடிட் கார்டு பில் விபரங்கள் உள்பட தமது சொத்து விபரங்கள் அனைத்தையும் வெளியிடப் போவதாக அண்ணாமலை கூறினார்.
தமது சொத்துப்பட்டியல் மட்டுமல்லாது, திமுக அமைச்சர்கள் மற்றும் அக்கட்சியின் அனைத்து எம்.எல்.ஏக்களின் உண்மையான சொத்து மதிப்பு, பினாமி பெயரில் வாங்கியுள்ள சொத்துக்களின் மதிப்பை வெளியிடுவேன்.
அதற்காக தனி இணையத்தளம் தொடங்கி வெளியிடப்போவதாகவும் அண்ணாமலை தெரிவித்தார். திமுக அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்களின் மொத்த சொத்து மதிப்பு 2 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு உள்ளது என்றும் கூறினார்.
Input From: Dinamalar