Kathir News
Begin typing your search above and press return to search.

"கரணம் தப்பினால் மரணம் என்கிற நிலைப்பாட்டில் காவல்துறை சகோதர சகோதரிகள் பணியாற்றுகிறார்கள்" - எஸ் ஐ வெட்டிகொலை செய்யப்பட்டது குறித்து அண்ணாமலை வருத்தம் !

கரணம் தப்பினால் மரணம் என்கிற நிலைப்பாட்டில் காவல்துறை சகோதர சகோதரிகள் பணியாற்றுகிறார்கள் -   எஸ் ஐ வெட்டிகொலை செய்யப்பட்டது  குறித்து அண்ணாமலை வருத்தம் !
X

DhivakarBy : Dhivakar

  |  21 Nov 2021 1:34 PM IST

திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு ஆய்வாளராக பணியாற்றிய பூமிநாதன் .ஆடும் திருடும் கும்பலை விரட்டிச் சென்ற போது, அக் கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தி.மு.க ஆட்சியின் சட்ட ஒழுங்கை காக்கும் காவல் துறையின் பாதுகாப்பு குறித்து அனைவரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருப்பதாவது : ''நவல்பட்டு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கயவர்களால் நேற்று இரவு வெட்டிக் கொல்லப்பட்டார் என்கின்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. கரணம் தப்பினால் மரணம் என்கிற நிலைப்பாட்டில் தான் நம்முடைய காவல்துறை சகோதர சகோதரிகள் பணியாற்றுகிறார்கள். பணி நேரத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு சிறப்பு சட்டம் எதுவும் கிடையாது, இது போன்ற நிகழ்வுகள் அந்த சிறப்பு சட்டம் வேகமாக வர வேண்டும் என்று நமக்கு நினைவூட்டுகிறது.

மாநில அரசு கூட இதுபோன்ற நிகழ்வுகளுக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணத் தொகையை அறிவித்து அதை செயல்படுத்த வேண்டும். அன்னாரது குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்'' என்று அவர் கூறியுள்ளார்.

Maalaimalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News