அரசு கலை அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை.!
தமிழகத்தில் உள்ள 143 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 2021 மற்றும் 2022ம் ஆண்டுக்கான இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை www.tngasa.in, www.tngasa.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் இன்று முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

By : Thangavelu

மேலும், இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்களுக்கு கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். இந்த மையங்களில் போதுமான அளவில் கொரோனா தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இணைய தளம் மூலமாக கட்டணம் செலுத்த முடியாத மாணவர்கள் மாவட்ட சேர்க்கை மையங்களில் The director directorate of collegiate education chennai-6 என்கிற பெயரில் நேரடியாகவும் கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். மேலும் அரசு இ சேவை மையத்தின் மூலமும் விண்ணப்பம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.