சென்னையில் 632 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையா? உளவுத்துறை போலீஸ்.!
சென்னையில் 632 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையா? உளவுத்துறை போலீஸ்.!
By : Kathir Webdesk
தமிழகத்தில் இன்னும் 2 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வருகிறது. இதனால் தேர்தல் ஆணையம் வேகமாக செயல்பட்டு வருகிறது. வாக்கு இயந்திரங்கள் சரி பார்த்தல், மற்றும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுதல் மற்றும் வாக்குச்சாவடிகள் கணக்கெடுக்கும் உள்ளிட்ட பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அதே தமிழகத்தில் பத்தற்றமான வாக்குசாவடிகள் பட்டியலை தயார் செய்யும் பணியில் தமிழக உளவு பிரிவு போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் 475 வாக்குசாவடிகள் பதற்றமானவையாகவும், 157 வாக்குசாவடிகள் மிகவும் பதற்றமானவையாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த தேர்தலில் குறிப்பிட்ட வேட்பாளருக்கு 75 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் பதிவாகி இருந்தாலும், பிரச்சனை ஏற்பட்டு மறுவாக்குப்பதிவு செய்திருந்தாலும், குறைவான வாக்குகள் பதிவானவையும் பதற்றமான வாக்குசாவடிகளாக கருதப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதே போன்று குறிப்பிட்ட சாதியினர் அதிகமாக உள்ள வாக்குச்சாவடிகளும், சமூக மோதல் ஏற்படக்கூடிய இடங்கள், ரவுடிகள் உள்ள ஏரியாவும் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கருதப்படும் என கூறப்படுகிறது.