நீலகிரி ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: முப்படையின் தலைமை தளபதியின் பிபின் ராவத் நிலை என்ன?
நீலகிரி மாவட்டத்தில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகி எரிந்து விழுந்ததில் பேர் எரிந்த நிலையில் மீட்கப்பட்டு 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By : Thangavelu
நீலகிரி மாவட்டத்தில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகி எரிந்து விழுந்ததில் பேர் எரிந்த நிலையில் மீட்கப்பட்டு 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதையில் ஹெலிகாப்டர் பறந்து கொண்டிருந்தபோது திடீரென்று ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று கீழே விழுந்துள்ளது. அதாவது கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து குன்னூருக்கு ஹெலிகாப்டர் சென்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஹெலிகாப்டரில் ராணுவ உயர் அதிகாரிகள் பலர் இருந்துள்ளனர். தற்போது ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளான சம்பவத்தில் 4 பேர் உடல்கள் எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். மீதி 3 பேர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
மேலும், மீதம் உள்ளவர்களை மீட்கும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். அந்த ஹெலிகாப்டரில் முப்படைகளின் ராணுவத் தலைளை தளபதி பிபின் ராவத்தும் இருந்தாக கூறப்படுகிறது. அவரது மனைவியும் உடன் சென்றதாக சொல்லப்படுவதால் தற்போது பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஏராளமான ராணுவ வீரர்கள் தற்போது நீலகிரி மலையில் முகாமிட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: Puthiyathalamurai