அரியர் தேர்வு கட்டாயம் நடக்கும்: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்.!
அரியர் தேர்ச்சி செய்யப்பட்டதை ஏற்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
By : Thangavelu
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கிய கொரோனா தொற்று இன்றுவரை குறைந்த பாடில்லை. இதனால் கொரோனா தொற்று பரவியதால் கல்லூரி தேர்வுகள் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இதன் காரணமாக அரியர் தேர்வுகளை ரத்து செய்வதற்கு தமிழக அரசு உத்தரவிட்டது.
அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதால், மாணவர்கள் மட்டுமின்றி பெற்றோர்களிடையும் வரவேற்பை பெற்றது. இது கல்வியாளர்களிடம் ஒருவிதமான எதிர்ப்பை உண்டாக்கியது மாணவர்களின் கல்வியை சீர்குலைக்கும் அபாயம் உள்ளது. தற்போது இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றுள்ளது. அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி மற்றும் வழக்கறிஞர் ராம்குமார் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்நிலையில், வழக்கு விசாரணைக்கு வந்த போது, அரியர் தேர்ச்சி செய்யப்பட்டதை ஏற்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், தேர்வுகள் நடத்துவதை பற்றி அரசு பரிசீலிக்க வேண்டும் எனு அரசுக்கு அறிவுறுத்தினர்.
இந்நிலையில், இன்று மீண்டும் அரியர் தேர்வு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரியர் தேர்வுகள் மே 17ம் தேதி முதல் ஆன்லைனில் நடத்தப்படும் என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அடுத்து வருகின்ற 8 வாரங்களில் ஆன்லைனில் தேர்வுகளை நடத்தி முடிக்க உத்தரவிடடு வழக்கை ஒத்திவைத்தனர்.
இந்த வழக்கால் மாணவர்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். தேர்வு நடைபெறுமா இல்லையா என்று ஒரு வருடம் சென்றுவிட்டதாக புலம்பி வருகின்றதை பார்க்க முடிகிறது.