மதமாற்றத்தை தடுத்த ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் ஜாமீனில் விடுதலை!
புதுக்கோட்டை அருகே மதமாற்றுவதற்கு வந்த பெண்களை தடுத்து நிறுத்திய காரணத்தினால், ஆர்எஸ்எஸ் நிர்வாகி மீது பெண்கள் தவறான புகார் கொடுத்ததால் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
By : Thangavelu
புதுக்கோட்டை அருகே மதமாற்றுவதற்கு வந்த பெண்களை தடுத்து நிறுத்திய காரணத்தினால், ஆர்எஸ்எஸ் நிர்வாகி மீது பெண்கள் தவறான புகார் கொடுத்ததால் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், இலுப்பூரை சேர்ந்த ராணி, தேவசாந்தி உள்ளிட்டோர் இணைந்து திம்மம்பட்டி கிராமத்தில் வசித்து வந்த ஒரு கர்ப்பிணியை மதம் மாற்ற முயற்சி செய்துள்ளனர். இதுப்பற்றி கேள்விப்பட்ட புதுக்கோட்டை மாவட்ட ஆர்எஸ்எஸ் செய்தித் தொடர்பாளர் கணேஷ்பாபு பெண்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
எப்படி மதமாற்றம் செய்யலாம் என கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் மதமாற்ற வந்த பெண்கள் கணேஷ்பாபு மீது வன்கொடுமை தடுப்பு உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்ய வைத்துள்ளனர். இதனால் கடந்த சனிக்கிழமை கணேஷ்பாபுவை போலீசார் கைது செய்தனர். இதனை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக பிரமுகர் ஹெச்.ராஜா உட்பட் 339 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனை தொடர்ந்து கீரனூர் குற்றவியல் நீதிமன்றத்தில் கணேஷ்பாபு சார்பில் ஜாமீன்கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர். அந்த ஜாமீன் வழக்கை விசாரித்த நீதிபதி பிச்சைராஜன், மறு உத்தரவு பிறப்பிக்கின்ற வரையில் இலுப்பூர் நீதிமன்றத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை ஜாமீனில் கணேஷ்பாபுவை விடுவித்து உத்தரவிட்டார். இதனையடுத்து கணேஷ்பாபு விடுதலை செய்யப்பட்டார். அவரை பாஜக, ஆர்எஸ்எஸ் பிரமுகர்கள் வரவேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: Dinamani