20 வருஷமா தி.மு.க'வில் இருப்பவரை "இருந்துட்டு போ" என வெளியேற்றிய அமைச்சர்!

By : Kathir Webdesk
சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி திமுக ஒன்றிய பிரமுகர் கோவிந்தன். இவரது மகன் கடந்த 2001 ஆம் ஆண்டு தாசநாயக்கன்பட்டி பகுதியில் போலீசார் தவறுதலாக சுடப்பட்டதில் உயிரிழந்தார். அதற்கு நிவாரணமும் தன்னுடைய இளைய மகனுக்கு அரசு வேலையும் வழங்க வலியுறுத்தி பலமுறை அரசுக்கும் தமிழ்நாடு முதலமைச்சருக்கும் மனு வழங்கியுள்ளார்.
இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர்கள் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு வந்த கோவிந்தன் அமைச்சகளிடம் இதுகுறித்து கோரிக்கை வைப்பதற்காக சென்றார்.
அப்போது, சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், அவரை தடுத்து நிறுத்திய நிலையில், இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்பொழுது சட்டமன்ற உறுப்பினரின் உதவியாளர் குறையைக் கூற வந்த, திமுக பிரமுகரை வலுக்கட்டாயமாக வெளியே அழைத்துச் சென்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டனர்.
20 வருடமாக திமுகவில் இருந்தும், தன்னால் ஒன்றுமே செய்யமுடியவில்லை என தலையில் அடித்துக்கொண்டார்.
Input From:
