Kathir News
Begin typing your search above and press return to search.

மாணவர்களுக்கான வீட்டுப்பாடம் குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு !

அரசு, உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மாதந்தோறும் வீட்டுப்பாடம் வழங்க வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அதிரடியான உத்தரவு பிறப்பித்துள்ளது.

மாணவர்களுக்கான  வீட்டுப்பாடம்   குறித்து  பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு !
X

ThangaveluBy : Thangavelu

  |  7 Aug 2021 12:04 PM IST

அரசு, உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மாதந்தோறும் வீட்டுப்பாடம் வழங்க வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அதிரடியான உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது பற்றி பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படிக்கின்ற மாணவர்களுக்கு படைப்பாற்றலை ஊக்கப்படுத்தும் வகையில், வாழ்த்து அட்டை தயாரித்தல், படம் வரைதல் போன்ற செய்முறை வீட்டுப்பாடங்கள் தரப்பட வேண்டும்.

6 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கின்ற மாணவர்களுக்கு கட்டுரை எழுதுதல், சுயவிவரக் குறிப்பு வரைதல் போன்ற வீட்டுப்பாடங்கள் தரப்பட வேண்டும். மேலும், 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு புத்தக விமர்சனம் போன்ற வீட்டுப்பாடங்கள் அளிக்கப்பட வேண்டும் என கூறியுள்ளார். அது மட்டுமின்றி பள்ளிக்கல்வித்துறையில் இருந்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்படும் வீட்டுப்பாடங்களையே, ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அளிக்க வேண்டும்.

Source: News 7

Image Courtesy:The Hindu

https://news7tamil.live/assignments-is-compulsory-for-students-school-education-department.html

Next Story
கதிர் தொகுப்பு
Trending News