Kathir News
Begin typing your search above and press return to search.

சர்வதேச அளவில் விண்கற்கள் கண்டறிதல்: தமிழகக் கல்லூரி மாணவர்கள் தேர்வு !

சர்வதேச விண்கற்கள் கண்டறிதல் ஆய்விற்கு கோவையை சேர்ந்த SNMVகல்லூரி மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சர்வதேச அளவில் விண்கற்கள் கண்டறிதல்: தமிழகக் கல்லூரி மாணவர்கள் தேர்வு !
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  6 Aug 2021 1:16 PM GMT

சர்வதேச விண்வெளி ஆய்வு அமைப்பானது (IASC) புதிய விண்கற்களை கண்டறியும் ஆய்வினை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. இந்த ஆண்டு இந்த ஆய்வில் பல்வேறு நாடுகளைச் சார்ந்த விண்வெளி ஆய்வாளர்களும், ஆர்வலர்களும் பங்கேற்று புதிய விண்கற்களை கண்டறிந்து வருகின்றனர். இந்த ஆண்டு ஆய்விற்கு இந்தியாவில் இருந்து 20 ஆய்வு குழுக்கள் தேர்வாகி உள்ளன. தமிழ்நாட்டில் இருந்து SNMV கல்லூரி இயற்பியல் துறை மாணவர்கள் G.கிருத்திகா கிருஷ்ணன், R.மோனிஷ் குமார், P.அபிநயா, T.காயத்திரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


இக்குழுவை Open Space Foundation என்பதின் தலைவர் திரு.சுரேந்தர் பொன்னழகர் ஒருங்கிணைக்கிறார். தமிழ்நாட்டிலிருந்து இவ்வாண்டில் தேர்வு செய்யப்பட ஒரே ஆய்வுக்குழு என்ற பெருமையை SNMV கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயற்பியல் துறை பெறுகிறது. இத்திட்டம் அமெரிக்க நாட்டின் Institute for Astronomy என்று நிறுவனம் பான்-ஸ்டார்ஸ்-01 என்ற தொலைநோக்கியின் மூலம் ஆண்டு முழுவதும் இரவு நேரங்களில் வானில் படங்களை எடுத்துவருகிறது.


இவ்விண்கற்கள் கண்டறிதல் குறித்த ஆய்வுத்திட்டம் அமெரிக்க நாட்டின் விண்வெளி ஆய்வு அமைப்பான நாசாவின் உதவியோடு CITIZEN SCIENTIST RESEARCH திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. இப்படி எடுக்கப்படும் படங்களை கொண்டு ஒரு பிரத்யேக மென்பொருள் உதவியுடன் விண்கற்களை கண்டறிவது இவ்வாய்வில் பங்கேற்கும் மாணவர்களின் பணியாகும். தற்பொழுது இந்த ஆய்விற்காக தமிழகத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது பெருமைக்குரிய விஷயம்தான்.

Input: https://tamil.samayam.com/latest-news/coimbatore-news/4-students-selected-from-kovai-snmv-arts-college-for-isac-research-are-only-crew-from-tn-to-study-on-asteroid-coimbatore-pride/articleshow/85088990.cms

Image courtesy: samayam news


Next Story
கதிர் தொகுப்பு
Trending News