ஈரோட்டில் ஏ.டி.எம். மையத்துக்குள் புகுந்த பாம்பு: பணம் எடுக்கசென்றவர் பதறி அடித்து ஓட்டம்.!
ஏ.டி.எம்.மில் பணம் எடுப்பதற்காக ஒருவர் உள்ளே சென்றுள்ளார். அப்போது அந்த ஏ.டி.எம். மையத்தில் சுமார் 5 அடி நீளமுள்ள பாம்பு ஊர்ந்து செல்வதை பார்த்து அங்கிருந்து பதறி அடித்து வெளியே ஓடிச்சென்றுள்ளார்.
By : Thangavelu
ஈரோடு நசியனூர் சாலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி செயல்பட்டு வருகிறது. அந்த வங்கியின் முன்புறம் ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், அந்த ஏ.டி.எம்.மில் பணம் எடுப்பதற்காக ஒருவர் உள்ளே சென்றுள்ளார். அப்போது அந்த ஏ.டி.எம். மையத்தில் சுமார் 5 அடி நீளமுள்ள பாம்பு ஊர்ந்து செல்வதை பார்த்து அங்கிருந்து பதறி அடித்து வெளியே ஓடிச்சென்றுள்ளார்.
இது பற்றிய தகவல் அருகாமையில் இருப்பவர்களுக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த ஏ.டி.எம். மையத்திற்குள் செல்வதற்கு அச்சப்பட்டிருந்தனர். இதனையடுத்து அந்த ஏ.டி.எம். மையம் தற்காலிமாக அடைக்கப்பட்டது. பாம்பை பிடிப்பதற்காக பாம்பு பிடி வீரர் யுவராஜிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர் அந்த ஏ.டி.எம். மையத்தில் பாம்பை பிடிக்கும் பணியில ஈடுபட்டார். அப்போது அனைத்து இடங்களிலும் தேடிப்பார்த்தும் பாம்பு பிடிப்படவில்லை. இதனால் அந்தப் பகுதியினர் ஏ.டி.எம். மையத்திற்கு செல்வதற்கு அச்சப்பட்டுள்ளனர். பாம்பு ஒரு வேளை ஏ.சி.யில் உள்ளே சென்றிருக்கலாம் என்றும் சோதனை நடைபெற்று வருகிறது. ஏ.டி.எம். மையத்தில் பாம்பு புகுந்த சம்பவம் ஈரோடு நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.