விருதுநகரில் விவசாயிகளை ஊக்குவிக்க தெருக்கூத்துகள் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி.!
விருதுநகரில் விவசாயிகளை ஊக்குவிக்க தெருக்கூத்துகள் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி.!

நமது நாடு வேளாண்மை நம்பியே உள்ளது. உலகத்திற்கு அதிகளவு தானியங்களை ஏற்றுமதியும் செய்து வருகிறது. ஆனால் நமது இன்றைய தலைமுறையினர் பலர் விவசாயங்களை பற்றி தெரிந்து கொள்ளலாமல் வாழ்ந்து வருகின்றனர். கிராமத்தில் பிறந்த விவசாயி மகன் கூட தற்போது விவசாயத்தில் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் விவசாயத்தொழில் தந்தையுடனே முடிந்துவிடும் என்ற அச்சமும் இருந்து வருகிறது.
அது போன்றவர்களை ஊக்குவிப்பதற்காக வேளாண்மை அதிகாரிகள் பல முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் வட்டாரத்தில் அட்மா திட்டத்தின் கீழ் மேலராஜகுலராமன் மற்றும் வடகரை கிராமங்களில் தெருக்கூத்து நடைபெற்றது.
இதில் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு, நுண்ணீர் பாசனம், மண் பரிசோதனை, மக்காச்சோளம் படைப்பூழுவை கட்டுப்படுத்தும் முறைகள், பருத்தி பயிர் பாதுகாப்பு முறைகள், பயறு வகைகள், டிஏபி கரைசல் தெளித்தல் போன்றவை கிராமிய பாடல்கள் மூலம் விவசாயிகளுக்கு பிரச்சாரம் செய்யப்பட்டது.
இந்த தெருக்கூத்தை பார்ப்பதற்காக ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
வேளாண்மை உதவி இயக்குநர் தி.சுப்பையா, வேளாண்மை அலுவலர் தனலட்சுமி , உதவி வேளாண்மை அலுவலர்கள் சுருளிசாமி, வேல்முருகன் ஆகியோர் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை பார்வையிட்டனர். இதற்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட தொழில்நுட்ப அலுவலர் வனஜா மற்றும் பிரபு செய்து செய்திருந்தனர்.