Kathir News
Begin typing your search above and press return to search.

துருப்புச்சீட்டான வாணியம்பாடி - சர்ச்சை கருத்துக்களை பரப்பி வரும் ஓவைசியின் கட்சி தமிழகத்தில் நுழைந்தது!

துருப்புச்சீட்டான வாணியம்பாடி - சர்ச்சை கருத்துக்களை பரப்பி வரும் ஓவைசியின் கட்சி தமிழகத்தில் நுழைந்தது!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  23 Feb 2022 8:27 AM IST

அசாதுதீன் ஓவைசியின் மஜ்லீஸ் கட்சி தமிழகத்தில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாணியம்பாடி நகராட்சிக்குப்பட்ட 19-வது வார்டில் அசாதுதீன் ஓவைசி கட்சி சார்பில் பட்டம் சின்னத்தில் போட்டியிட்ட நபிலா அகமது வெற்றி பெற்றுள்ளார்.

அசதுத்தீன் ஒவைசி இந்தியா மஸ்ஜிதே இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் தலைவராக பொறுப்பு வகிக்கிறார். இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைக்கு ஹைதராபாத் தொகுதியில் இருந்து மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் 15வது பாராளுமன்றத்தின் சன்சாத் ரத்னா விருதினையும் பெற்றுள்ளார். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில், ஹைதராபாது மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, மக்களவையில் உறுப்பினர் ஆனார்.

அரசியல் ஈடுபாடு கொண்டிருந்தாலும், அவ்வப்போது தேசிய சிந்தனைக்கு எதிராக கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கிக்கொள்வார். தமிழக அரசியலில் நுழைவதாக கூறிக்கொண்டிருந்த நிலையில், இஸ்லாமிய வாக்குகள் அதிகம் கொண்ட தொகுதியில் வேட்பாளர்களை நிறுத்தி களமிறங்கினார்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News