பாழடைந்த நிலையில் பாபுராயன் பேட்டை வரதராஜ பெருமாள் கோயில்: கண்டுகொள்ளாத இந்து சமய அறநிலையத்துறை!
தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை வந்ததற்கு பின்னர் பல்வேறு கோயில்கள் காணாமல் போயுள்ளது. அது மட்டுமின்றி முறையான பராமரிப்புகள் செய்யாமல் விட்டு விடுவது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
By : Thangavelu
தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை வந்ததற்கு பின்னர் பல்வேறு கோயில்கள் காணாமல் போயுள்ளது. அது மட்டுமின்றி முறையான பராமரிப்புகள் செய்யாமல் விட்டு விடுவது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டத்தில் அச்சரபாக்கம் என்ற ஊர் அமைந்துள்ளது. இங்கு சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் விஜயநகரப் பேரரசுக் காலத்தில் கட்டப்பட்ட விஜய வரதராஜப் பெருமாள் கோயில் ஒன்று உள்ளது. இந்த கோயில் தற்போது மிகவும் பாழடைந்த நிலையில் உள்ளது. இதனை இந்து அறநிலையத்துறை மட்டுமின்றி இந்துக்களும் கண்டுக்கொள்ளாமல் விட்டு உள்ளனர். இதனால் மிகவும் இடிந்து விழும் நிலையில கோயில் உள்ளது.
அச்சரபாக்கம் அருகில் உள்ள பாபுராயன் பேட்டையில் உள்ள விஜயநகரப் பேரரசுக் காலத்தில் கட்டப்பட்ட விஜய வரதராஜப் பெருமாள் கோயிலின் நிலை குறித்து வீடியோ ஒன்றை ஆவணப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள் வீடியோவில், அச்சரப்பாக்கம் அருகாமையில் உள்ள பாபுராயன் பேட்டை என்ற ஊரில் விஜய வரதராஜ பெருமாள் கோயிலின் ராஜகோபுரம் அமைந்துள்ளது. இது முதல் கோபுரம் ஆகும். இந்த கோயிலை கட்டியவர் பாபுராயன் என்று பரவலாக பேசப்படுகிறது. இது பற்றிய ஆவணங்களும் கோயிலில் உள்ளது.
அவர் ஏன் இந்த கோயிலை கட்டினார் என்றால், அவருக்கு காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் மீது அதிக பற்றும் ஆர்வமும் கொண்டவர். ஆனால் அவர் வேலை பார்த்த இடம் அச்சரப்பாக்கம் ஆகும். அவர் தனது அரசரிடம் என் வேலையை முடித்துவிட்டு காஞ்சிபுரம் போய் எனது இஸ்ட தெய்வத்தை வணங்க முடியவில்லை என்று கூறியுள்ளார். அப்போது அரசர் அவரிடம் சொல்கிறார். உனக்கு பிடித்த தெய்வம் உள்ள கோயிலை அச்சரப்பாக்கத்திலேயே கட்ட உத்தரவு பிறப்பிக்கிறார். இதனால் இந்த கோயில் கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பூஜைகளுக்காக திறந்து விடப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் வரதராஜ கோயிலுக்கு சென்றவர்கள் பலர் அச்சரப்பாக்கத்திலேயே சென்று பொதுமக்கள் வணங்கி வந்துள்ளனர். பண்டைய காலங்களில் மிகவும் பொழிவுடன் இருந்த கோயில் நாளடைவில் பாழடைந்த நிலையில் உள்ளது. இந்து அறநிலையத்துறைக்கு பின்னர் தமிழகத்தில் உள்ள கோயில்கள் முறையாக பராமரிக்காமல் விட்டுள்ளனர். இதனால பல கோயில்கள் அழிந்துள்ளது. அது போன்று அச்சரப்பாக்கத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலும் இடிந்து விழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
எனவே உடனடியாக இதனை மீட்க வேண்டும் என்றால் ஒவ்வொரு இந்துக்களும் மீண்டும் கோயிலுக்கு சென்று வழிபாடுகளை நடத்தலாம். அப்போது மீண்டும் பக்தர்கள் அதிகரித்தால் அங்கு இந்து அறநிலையத்துறை தனது பார்வையை திருப்ப வாய்ப்பு இருக்கலாம் என்றார். ஆனால் தற்போதைய நிலையில் ஒரு உண்டியல் வைத்து அதில் ஒரு 10 ரூபாய் காணிக்கை போட்டோம் என்றால் இந்து அறநிலையத்துறை வரும் என்ற நிலை உருவாகியுள்ளது. எனவே அரசு மற்றும் உள்ளூர் மக்களும் பதில் அளிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது என்றார்.
Source: Youtube