விருத்தாசலத்தில் வக்பு வாரியம் சொந்தம் கொண்டாடிய சொத்துக்கள் மீதான தடை அதிரடி நீக்கம் - பாதிக்கப்பட்ட மக்கள் மகிழ்ச்சி
விருத்தாச்சலம் பகுதியில் வக்பு வாரியம் சொந்தம் கொண்டாடிய சொத்துக்கள் மீதான தடை நீக்கப்படுகிறது என சப் கலெக்டர் பழனி உத்தரவிட்டுள்ளார்.

By : Mohan Raj
விருத்தாச்சலம் பகுதியில் வக்பு வாரியம் சொந்தம் கொண்டாடிய சொத்துக்கள் மீதான தடை நீக்கப்படுகிறது என சப் கலெக்டர் பழனி உத்தரவிட்டுள்ளார்.
விருத்தாச்சலம் நகராட்சி இந்திரா நகர், சிந்தாமணி நகர், முல்லை நகர், நபிகள் நாயகம் ரோடு, வயலூர், பூந்தோட்டம், கார்குடல் என பல்வேறு பகுதியில் உள்ள குறிப்பிட்ட நிலங்கள் வக்பு வாரியத்திற்கு சொந்தம் என அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக அந்த நிலம் அனைத்தும் பூஜ்ய மதிப்பு என விருத்தாச்சலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் அறிவிக்கப்பட்டது.
மேலும் அந்த சொத்துக்களை வாங்கவோ, விற்கவோ முடியாது என்பதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதன் காரணமாக விருத்தாச்சலம் அலுவலகத்தில் சப் கலெக்டர் பழனி தலைமைகள் அமைதி கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்தில் மாநில பத்திர பதிவுத்துறை அறிவித்துள்ள வக்பு வாரியத்திற்கு சொந்தமான சொத்து என அவர்கள் கருதும் பட்சத்தில் அவர்கள் அதற்கான ஆவணங்களை முறைப்படி அளிக்கும் வரை பழைய நிலையே தொடரும் எனவும் அதன் அடிப்படையில் தொடர்ந்து பத்திரப்பதிவு நடைபெறும் அதன் மூலம் சொத்துக்களை வாங்க, விற்க இருந்த தடை நீக்கப்பட்டுள்ளது எனவும் சப் கலெக்டர் பழனி உத்தரவிட்டார். இந்த கூட்டத்தில் பாதிக்கப்பட்ட ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.
