வெளிமாநில வியாபாரிகள் வருகை குறைவு ! திருப்பூரில் பனியன் வர்த்தகம் பாதிப்பு !
காதர்பேட்டை சந்தைக்கு வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வியாபாரிகள் வந்து மொத்தமாக பின்னலாடைகளை வாங்கி ஏற்றுமதி செய்வதும், வெளி மாநிலங்களுக்கு அனுப்புவதும் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக காதர்பேட்டையில் வரும் வெளிமாநில வியாபாரிகளில் முக்கிய பங்கு வகிப்பது கேரளா வியாபாரிகள்தான்.
By : Thangavelu
திருப்பூர் மாவட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பனியன் உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இவைகள் ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு உற்பத்தி சார்ந்தும் செயல்படுகிறது. இதற்கு என்று மொத்த மற்றும் சில்லறை விற்பனைக்கு என்று திருப்பூர் காதர்பேட்டையில் கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு 100க்கும் அதிகமான சில்லரை மற்றும் மொத்த ஆடை விற்பனை நிறுவனங்கள் உள்ளது.
காதர்பேட்டை சந்தைக்கு வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வியாபாரிகள் வந்து மொத்தமாக பின்னலாடைகளை வாங்கி ஏற்றுமதி செய்வதும், வெளி மாநிலங்களுக்கு அனுப்புவதும் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக காதர்பேட்டையில் வரும் வெளிமாநில வியாபாரிகளில் முக்கிய பங்கு வகிப்பது கேரளா வியாபாரிகள்தான்.
கேரளாவில் இருந்து தினமும் ரயில்கள் மூலம் வியாபாரிகள் காதர்பேட்டைக்கு வந்து ஆடைகளை வாங்கி செல்வது வழக்கம். இதனிடையே கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்று உச்சத்தில் உள்ளது. இதனால் காதர்பேட்டைக்கு கொள்முதல் செய்ய வருகின்ற கேரளா உள்ளிட்ட வெளிமாநில வியாபாரிகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.
இது பற்றி காதர்பேட்டை பின்னலாடை வியாபாரிகள் கூறியதாவது: தினமும் கேரளாவில் இருந்து 100க்கும் மேற்பட்ட வியாபாரிகள் துணி மற்றும் ஆடைகளை கொள்முதல் செய்ய வருவார்கள். ஆனால் தற்போது கொரோனா காரணமாக அவர்களின் வருகை முற்றிலும் குறைந்துள்ளது.
கேரளா மற்றும் தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கும் நிலையில், கட்டுப்பாடுகள் பல விதிக்கப்படுகிறது. இதன் காரணமாகவும் வியாபாரிகள் வருகை குறைந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Source: Maalaimalar
Image Courtesy:The Economics India
https://www.maalaimalar.com/news/district/2021/08/07124224/2899480/Banyan-trade-in-Tirupur-has-been-severely-affected.vpf