Kathir News
Begin typing your search above and press return to search.

வீட்டிலேயே தங்கைக்கு பிரசவம் பார்த்த அண்ணன் மீது பாய்ந்த வழக்கு.!

சகோதரி மோனிஷாவுக்கு நேற்று பிரவச வலி ஏற்பட்டதை தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளார். அதில் குழந்தை இறந்துள்ளது.

வீட்டிலேயே தங்கைக்கு பிரசவம் பார்த்த அண்ணன் மீது பாய்ந்த வழக்கு.!
X

ThangaveluBy : Thangavelu

  |  3 July 2021 10:59 AM IST

சென்னை அடுத்துள்ள தாம்பரத்தில் கர்ப்பிணியை வீட்டிலேயே வைத்து அவரது சகோதரர் பிரசவம் பார்த்த நிலையில், குழந்தை இறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு தாம்பரம் திருவள்ளூவர் நகரை சேர்ந்தவர் சிபின், இவர் மோனிசா என்ற சகோதரியுடன் வசித்து வருகிறார். சகோதரி மோனிஷாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு கர்ப்பமுற்றதாக கூறப்படுகிறது.





இந்நிலையில், சகோதரி மோனிஷாவுக்கு நேற்று பிரவச வலி ஏற்பட்டதை தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளார். அதில் குழந்தை இறந்துள்ளது. அதிகமான ரத்தபோக்கால் மோனிஷா அவதியுற்றுள்ளார். இதனை தொடர்ந்து இறந்தை குழந்தையை பையில் வைத்துக்கொண்டு தெருமுனையில் வைத்துவிட்டு மோனிஷாவை அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு சிபின் அழைத்து சென்றுள்ளார்.





அப்போது சிபினிடம் குழந்தை எங்கே என்று மருத்துவர் கேட்டுள்ளார். அப்போது நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இது பற்றி மருத்துவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலை தொடர்ந்து பையில் வைத்திருந்த குழந்தையை கைப்பற்றிய போலீசார், சந்தேக மரணம் என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்து சிபினிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சகோதரியை வீட்டில் வைத்து பிரசவம் பார்த்து குழந்தை இறந்த சம்பவம் தாம்பரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News