Kathir News
Begin typing your search above and press return to search.

கழிவு பொருட்களை பயன்படுத்தி அழகான மாற்று பொருட்கள்.. நெல்லை மாநகராட்சி அசத்தல்.!

கழிவு பொருட்களை பயன்படுத்தி அழகான மாற்று பொருட்கள்.. நெல்லை மாநகராட்சி அசத்தல்.!

கழிவு பொருட்களை பயன்படுத்தி அழகான மாற்று பொருட்கள்.. நெல்லை மாநகராட்சி அசத்தல்.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  16 Dec 2020 10:18 AM GMT

நெல்லை மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் கழிவு பொருட்களை பயன்படுத்திய அதற்கு ஏற்றவாறு புதிய அழகான பொருட்களாக வடிவமைத்து அசத்தியுள்ளார்.

தற்போது திட கழிவு மேலாண்மை செய்வது என்பது பெரும் சவாலான விஷயமாக பார்க்கப்படுகிறது. தினசரி 170 டன் குப்பைகள் நெல்லை மாநகராட்சி பகுதிகளில் இருந்து உருவாகிறது. அதில் மட்கும் குப்பைகள் பிரிக்கப்பட்டு உரமாக்கப்படுகிறது. மக்காத குப்பைகள் மேலாண்மை செய்வதற்கு தற்போது நெல்லை மாநகராட்சி புதிய முயற்சியை மேற்கொண்டு வருகிறது.

நெல்லை மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் புதிய முயற்சி மேற்கொண்டு வருகிறார். அதில் வீணாக குப்பைகளில் போடப்பட்ட பழைய டயர்கள், உடைந்த பைப்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள், மரக்கிளைகள், போன்றவற்றில் பயனுள்ள பொருட்களாக மறு உபயோகம் செய்வதற்கு புதிய முயற்சியை எடுத்து வருகிறார்.

நெல்லை மாநகர நல அலுவலர் சரோஜா, மற்றும் பாளை மண்டல உதவி ஆணையாளர் பிரேம் ஆனந்த், ஆலோசனை படி சுகாதார அலுவலர் ஷாகுல் ஹமீது மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர் நடராஜன் தலைமையில் புதிய முயற்சியாக வேலவர் காலனி, சங்கர் காலனி, அருள் நகர், மனகாவலம்பிள்ளை நுண் உரம் செயலாக்க மையங்களில் மற்றும் வளம் மீட்பு மையங்களில் கழிவு பொருட்கள் மூலமாக சோதனை முயற்சியில் மறு உபயோக பொருள்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

உடைந்த பிவிசி பைப்கள், இளநீர் கூடு, தேவையற்ற பாட்டில்கள் பழைய டயர் கொண்டு அழகிய பூந்தொட்டி, உடைந்த சின்டெக்ஸ் டேங்க் மறு உபயோகமாக பறவை கூண்டு செய்துள்ளனர்.

இதில் மேற்பார்வையாளர் முருகன் தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் கனகப்ரியா, சீதா லட்சுமி, கண்ணன், ரேவதி அருள்செல்வன் மற்றும் பணியாளர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர். இதே போன்று மற்ற மாநகராட்சிகளிலும் செயல்படுத்தினால் குப்பைகள் இல்லா மாநிலமாக தமிழகம் மாறும் என்பதில் சந்தேகம் இல்லை.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News