Kathir News
Begin typing your search above and press return to search.

பி.எட். சேர்க்கைக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.. தமிழக அரசு தகவல்.!

பி.எட். சேர்க்கைக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.. தமிழக அரசு தகவல்.!

பி.எட். சேர்க்கைக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.. தமிழக அரசு தகவல்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  3 Dec 2020 7:33 PM GMT

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட்., சேர்க்கைக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் 2020 - 2021ம் கல்வி ஆண்டிற்கான இலங்கலைக் கல்வியியல் (B.E.d) பட்டயப்படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பத்தை, மாணவர்கள் www.tngasaedu.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம். விண்ணப்பம் பதிவு செய்ய விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும்.


எஸ்.சி., மற்றும் எஸ்.டி., மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.250 மட்டும் செலுத்தினால் போதும். மாணவர்கள் விண்ணப்பிக்கும்போது, தங்களது விருப்ப வரிசைப்படி கல்லூரிகளைத் தேர்வு செய்ய வேண்டும்.


விண்ணப்பிக்கும்போது மாணவர்கள் தங்களது சான்றிதழ்களை www.tngasaedu.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இது தொடர்பான கூடுதல் விவரங்களை www.tngasaedu.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 044,22351014, 044,22351015 மற்றும் 044,28278791 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News