Kathir News
Begin typing your search above and press return to search.

சிறந்த மாநில விருது.. தொடர்ந்து 3 வது முறையாக தமிழகம் முதலிடம்.. ட்விட்டரில் பகிர்ந்த முதலமைச்சர்.!

சிறந்த மாநில விருது.. தொடர்ந்து 3 வது முறையாக தமிழகம் முதலிடம்.. ட்விட்டரில் பகிர்ந்த முதலமைச்சர்.!

சிறந்த மாநில விருது.. தொடர்ந்து 3 வது முறையாக தமிழகம் முதலிடம்.. ட்விட்டரில் பகிர்ந்த முதலமைச்சர்.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  27 Nov 2020 5:11 PM GMT

இந்தியா டுடே இதழ் நடத்திய ஆய்வில், அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் மாநிலங்களுக்கான பட்டியலில், தமிழகம் தொடர்ந்து 3வது ஆண்டாக முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.

இந்தியா டுடே இதழ் ஆண்டு தோறும் சிறந்த மாநிலங்களுக்கான விருதை வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான விருது அடுத்த மாதம் 5ம் தேதி வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கு தேர்வான மாநிலங்களின் பட்டியலை அந்த இதழ் வெளியிட்டுள்ளது.


அதில், அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் தொடர்ந்து 3வது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது. நீர்மேலாண்மை, சுகாதாரத்துறை,, உள்ளாட்சித்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதத்தை இந்தியா டுடே இதழ் நிர்வாகம் சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கடிதமாக கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில், இமாச்சல பிரதேசம் இரண்டாவது இடத்தையும், பஞ்சாப் மூன்றாவது இடத்தையும், கேரளா 4வது இடத்தையும், குஜராத் 5வது இடத்தையும் பிடித்துள்ளது. இதனை முதலமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அரசு அதிகாரிகள், பணியாளர்களின் அயராத உழைப்பு, அர்ப்பணிப்பாலும், தமிழக மக்களின் ஒத்துழைப்பாலுமே, தொடர்ந்து 3வது முறையாக சிறந்த மாநிலமாக தமிழ்நாடு தேர்வாகி சாதனை புரிந்துள்ளது. இவ்விருதினை அனைவருக்கும் அன்போடு சமர்ப்பிக்கிறேன். தொடர்ந்து தமிழக வளர்ச்சிக்கு ஒற்றுமையாக உழைப்போம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News