Begin typing your search above and press return to search.
பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!
100 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் 97 அடியை எட்டியதால், அணையின் பாதுகாப்பு கருதி நான்கு மதகுகள் வழியாக 14 ஆயிரம் கனஅடி தண்ணீர் பவானி ஆற்றில் தற்போது திறந்து விடப்பட்டுள்ளது.

By : Thangavelu
தனது முழு கொள்ளளவை எட்டிய பில்லூர் அணையில் இருந்து பாதுகாப்பு கருதி உபரி நீர் திறந்து விடப்படுவதால் பவானி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. கர்நாடகா, கேரளா, நீலகிரி மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணைக்கு வருகின்ற நீரின் அளவு 14 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
100 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் 97 அடியை எட்டியதால், அணையின் பாதுகாப்பு கருதி நான்கு மதகுகள் வழியாக 14 ஆயிரம் கனஅடி தண்ணீர் பவானி ஆற்றில் தற்போது திறந்து விடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பவானி ஆற்றங்கரையோரம் வசிக்கின்ற மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது.
Next Story