Kathir News
Begin typing your search above and press return to search.

100 அடியை எட்டிய பவானிசாகர் அணை.. கரையோர வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை.!

கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வந்தது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

100 அடியை எட்டிய பவானிசாகர் அணை.. கரையோர வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை.!
X

ThangaveluBy : Thangavelu

  |  26 July 2021 11:40 AM IST

ஈரோடு மாவட்டத்தில் பவானிசாகர் அணை உள்ளது. இது ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய மண் அணை என்ற பெயரை பெற்றுள்ளது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 105 கன அடியாகும். அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது.


கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வந்தது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் வருவாய் துறையினர் பவானிசாகர் அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்படலாம் என்று தெரிகிறது. இதனால் பவானிசாகர் ஆற்றங்கரையோரம் வசிக்கின்ற பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், தற்போது அணைக்கு நீர்வரத்து 6324 ஆக உயர்ந்துள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 99 அடியாக இருந்த நிலையில், படிப்படியாக நீர்வரத்து அதிகரித்து தற்போது பவானிசாகர் அணை 100 அடியை எட்டியுள்ளது. இதனால் 5200 கனஅடி நீர், அணையில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News