மாணவ மாணவிகளை குறிவைக்கும் மத மாற்ற கும்பல் : சேலத்தில் பள்ளி மாணவிகளுக்கு பைபிள் விநியோகம் !
By : Kathir Webdesk
சேலம் மாவட்டத்தில் மகளிர் மேல்நிலைப்பள்ளி முன்பு மாணவிகளுக்கு பைபிள் விநியோகம் செய்யப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் கல்வி நிலையங்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும் கிறிஸ்தவ சட்ட விரோத மதமாற்ற செயல் வேகமாக நடந்து வருகிறது என குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், மகளிர் மேல்நிலைப் பள்ளி முன்பு பைபிள் மற்றும் மத பிரச்சார நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது, இக்குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் பாத்திமா மகளிர் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு அப்பகுதி பெண் குழந்தைகள் பலரும் படித்து வருகின்றனர். அப்பள்ளி மாணவிகள் மனதில் கிறிஸ்துவ மத போதனைகளை திணிக்கும் நோக்கில், பள்ளிக்கு எதிரே மனைவிகள் வெளியே வரும் வேலையில் மாணவிகளுக்கு இலவச பைபிள் மற்றும் மத பிரச்சார நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது. இத்தகவல் அறிந்த இந்து முன்னணி அமைப்பு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சட்ட விரோத நடவடிக்கையை தடுத்து நிறுத்தியது
இதுகுறித்து இந்து முன்னணி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :
சேலம் மாவட்டம் பாத்திமா மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பெண் குழந்தைகள் படித்து வருகின்றனர்.இந்த பள்ளிக்கூடத்திற்கு முன்பு கிறிஸ்தவர்கள் மாணவிகளுக்கு பைபிள் மற்றும் மதபிரச்சார நோட்டிஸ் விநியோகம் இந்துமுன்னணியினர் தடுத்து நிறுத்தம்.
கடந்த சில மாதங்களாக கிறிஸ்துவ சட்ட விரோத மத மாற்ற முயற்சிகளை இந்து முன்னணி அமைப்பு முறியடித்து வருவது குறிப்பிடத்தக்கது.