Kathir News
Begin typing your search above and press return to search.

பிரதமர் மோடியை வரவேற்க பா.ஜ.க சார்பில் பிரமாண்ட ஏற்பாடு: களை கட்டும் சென்னை!

பிரதமர் மோடி அவர்களை வரவேற்க பா.ஜ.க சார்பில் பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியை வரவேற்க பா.ஜ.க சார்பில் பிரமாண்ட ஏற்பாடு: களை கட்டும் சென்னை!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  26 May 2022 1:41 PM GMT

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தரைவழி மார்க்கமாக சிவானந்த சாலை வழியாக நேரு உள் விளையாட்டு அரங்கில் பயணம் செய்திருக்கிறார். எனவே 3 கிலோமீட்டர் பயணத் தொலைவு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பா.ஜ.க தொண்டர்கள் வழிநெடுகிலும் பல்வேறு வகையான ஏற்பாடுகளும் செய்து இருக்கிறார்கள். குறிப்பாக சிவன் சிலை அமைத்து கும்பாபிஷேகம், ருத்ரதாண்டவம், பரதநட்டியம் நிகழ்ச்சி போன்ற வரவேற்பு நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.


மேலும் பா.ஜ.க சார்பில் தலைப்பாகை நிகழ்ச்சி, மேளதாளம், நாதஸ்வர கச்சேரி, மயிலாட்டம், ஒயிலாட்டம் தனி வரவேற்பு உண்டு பல்வேறு வகையான வரவேற்பு நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்து இருக்கிறார்கள். எனவே இந்த பிரம்மாண்ட வரவேற்பு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பா.ஜ.கவின் கட்சி கொடிகளை பல்வேறு இடங்களில் பறக்க செய்துள்ளார்கள். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உற்சாக நிலையில் இருக்கிறார்கள்.

Input & Image courtesy:News 18

Next Story
கதிர் தொகுப்பு
Trending News