Kathir News
Begin typing your search above and press return to search.

ஊழலில் இருப்பிடமாக மாறி இருக்கும் இறப்பு, பிறப்பு சான்றிதழ்கள் - ஆன்லைன் முறையிலும் லஞ்சம்!

ஊழலில் இருப்பிடமாக இருந்து வரும் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை வழங்கும் முறையில் ஆன்லைனில் கூட லஞ்சம்.

ஊழலில் இருப்பிடமாக மாறி இருக்கும் இறப்பு, பிறப்பு சான்றிதழ்கள் - ஆன்லைன் முறையிலும் லஞ்சம்!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  24 Sep 2022 2:30 AM GMT

நெஞ்சம் தவிர்ப்போம், நெஞ்சை நிரூபிப்போம் என்று தமிழக அரசு அலுவலகங்களில் எழுதப்பட்டு இருக்கிறது. ஆனாலும் அனைத்து அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால்தான் காரியம் நடக்கிறது என்பது எழுதப்படாத விதியாக இருக்கிறது. ஒரு மனிதன் பிறந்தவுடன் அவனுக்கான பிறப்பு சான்றிதழ் பெறுவதில் தொடங்குவது முதல், அவன் இறந்த பிறக்கும் பின்பு பெறப்படும் இறப்பு சான்றுகள் வரை தொடர்கிறது. அரசு அலுவலகங்களில் லஞ்சத்தை முதற்கட்டமாக ஒழிக்க வேண்டும் என்பதற்கு பெரும்பாலான அரசு சேவைகளை தற்போது டிஜிட்டல் முறையில் கொண்டு வந்து இருக்கின்றது.


ஆனால் இது குறித்து மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததும் லஞ்சம் வாங்கிய ஆகவேண்டும் என்ற அரசு ஊழியர்களின் எண்ணமும் லஞ்சத்தை இன்னும் உயிரோடு வைத்து இருக்கிறது. கடந்த காலங்களில் அரசு அலுவலர்களுக்கு நேரில் சென்று பெற்று வந்த பல சேவைகளை இன்று வீட்டில் இருந்து டிஜிட்டல் மூலம் தற்போது பெற முடியும். உதாரணமாக பிறப்பு இறப்பு சான்றிதத்தில் கூறலாம். முன்பெல்லாம் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் நிகழும் பிறப்பு மற்றும் இறப்பு அந்த ஆஸ்பத்திரியின் இருந்து எழுதி உள்ளாட்சித் துறைக்கு அனுப்புவார்கள். அதனை உள்ளாட்சித் துறையினர் பதிவு செய்வதற்கு குறைந்தபட்சம் ஒரு மாதம் ஆகும்.


அதன் பின் பொதுமக்கள் உள்ளாட்சித் துறை அலுவலகத்திற்கு அலையால் அடைந்து பிறப்பிடம் சான்றிதழ்களைப் பெற முடியும். இந்த பிரச்சினையை தீர்ப்பதற்காக டிஜிட்டல் முறையில் பிறப்பு இறப்பு சான்றிதழ்கள் பெரும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது ஆஸ்பத்திரிக்களின் நிகழும் இறப்புகள் உடனடியாக ஆஸ்பத்திரி மூலமாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உள்ளாட்சி அமைப்பு அலுவலக ஆய்வு செய்து ஏற்றுக்கொள்ள வேண்டும். இதன் மூலம் பொதுமக்கள் எந்த ஒரு அரசு அலுவலகத்திற்கும் செல்லாமல் வீட்டில் இருந்தபடியே சான்றுதல்களை பெற முடியும். ஆனால் பொது மக்களுக்கு இந்த இணையதளம் குறித்து தெரியாது தான் தற்போது உள்ளாட்சி அலுவலகங்களுக்கு அலியை அடைந்து கொண்டிருக்கிறார்கள். இதனை பெறுவதற்காக பிறப்பு சான்றிதழ் கொடுக்க ரூபாய் 1000 வரை லஞ்சம் பெறுகிறார்கள். இனி லஞ்சம் இல்லாமல் பெறுவதற்கான நடைமுறையை உருவாக்க வேண்டும் என்று பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Input & Image courtesy:



Next Story
கதிர் தொகுப்பு
Trending News