Kathir News
Begin typing your search above and press return to search.

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் பாலியல் புகாரில் கைது.!

பாலியல் புகார் காரணமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி தமிழ்த் துறை தலைவர் பால் சந்திரமோகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் பாலியல் புகாரில் கைது.!
X

ThangaveluBy : Thangavelu

  |  7 July 2021 1:32 PM IST

பாலியல் புகார் காரணமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி தமிழ்த் துறை தலைவர் பால் சந்திரமோகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி, பிஷப் ஹீபர் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவர் சந்திரமோகன் பல்வேறு மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்தாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மாணவிகள் புகார் அளித்தனர். இதனிடையே சந்திரமோகன் மீதான பாலியல் புகாரை விசாரிப்பதற்காக மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர், சமூக நல அலுவலர் என 7 பேரைக் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவின் பரிந்துரையின் பேரிலும், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரிலும் திருச்சி மாநகர காவல்துறையினர் புகார் தெரிவித்த மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இதில் பால் சந்திர மோகன் மாணவிகளிடம் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டது உறுதியானது. இதனையடுத்து பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள ஸ்ரீரங்கம் மகளிர் போலீசார் அவரை கைது செய்தனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News