வருமானம் அடி வாங்குதோ..? திருநெல்வேலியில் மணல் கடத்திய பிஷப் மற்றும் 5 பாதிரியார்கள்!
Bishop river sand smuggling case tamilnadu
By : Kathir Webdesk
திருநெல்வேலி மாவட்டத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்ட கேரளாவைச் சேர்ந்த கத்தோலிக்க பிஷப் கைது செய்யப்பட்டார். அவரோடு சேர்ந்து மேலும் ஐந்து பாதிரியார்கள் கைது செய்யப்பட்டனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில், அம்பாசமுத்திரம் அருகே உள்ளது பொட்டல் கிராமம். அங்கு கேரள மாநிலம் பத்தனம்திட்டா பகுதியை சேர்ந்த கத்தோலிக்க சபைக்கு சொந்தமான நிலம் உள்ளது. அதில், கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல், கேரள பாதிரியார் மனுவேல் ஜார்ஜ் என்பவர், எம் சாண்ட் தயாரிக்கும் ஆலையை நடத்தி வந்துள்ளார்.
எம் சாண்ட் எனப்படும் செயற்கை மணல் தயாரிப்பதாக கூறி அனுமதி வாங்கிவிட்டு, அங்கிருந்து சுமார் முப்பதாயிரம் ஆயிரம் கியூபிக் மீட்டர் ஆற்று மணலை முறைகேடாக கடத்தியுள்ளார். இது குறித்து உயிர்நீதிமன்ற உத்தரவின் படி, வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் பாதிரியார் மனுவேல் ஜார்ஜ் மீது நடவடிக்கை மேற்கொண்டனர்.
அவர் நடத்தி வந்த எம்.சாண்ட் நிறுவனத்திற்கு, 9.50 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. சேரன்மகாதேவி சப் - கலெக்டர் பிரதீக் தயாள் இந்த உத்தரவை பிறப்பித்தார். மணல் கடத்தலில் உதவிய சமீர் என்பவரும் கைது செய்யப்பட்டார். பாதிரியார் மணல் கடத்தலில் ஈடுபட்ட சமயத்தில், கனிமவளத்துறை உதவி இயக்குனராக, சமீரின் உறவினர் சபீதா பொறுப்பு வகித்து வந்துள்ளார். அவர் தற்போது துாத்துக்குடிக்கு மாற்றப்பட்டார்.
இந்த வழக்கில் மணல் கடத்தலில் ஈடுபட்ட உள்ளூர் ஆட்கள் 8பேர் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். இதற்கிடையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரிக்க, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சி.பி.சி.ஐ.டி., போலீசார் மேற்கொண்ட விசாரணையில், மணல் கடத்தலில் தொடர்புடைய கேரள மாநிலம், பத்தனம்திட்டாவை சேர்ந்த பிஷப் சாமுவேல் மார் இரோனஸ் மற்றும் 5பாதிரியார்களை கைது செய்தனர்.