Kathir News
Begin typing your search above and press return to search.

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அரசு 7ம் ஆண்டு நிறைவு: பொதுமக்களுக்கு முககவசம், கபசுர குடிநீர் வழங்கிய பா.ஜ.க.வினர்.!

இந்திய பிரதமராக மோடி பதவியேற்று 7 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பாஜகவினர் தங்களின் உற்சாகத்தை, பொதுமக்களுக்கு மருத்துவ உதவிகள் மற்றும் உணவுகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அரசு 7ம் ஆண்டு நிறைவு: பொதுமக்களுக்கு முககவசம், கபசுர குடிநீர் வழங்கிய பா.ஜ.க.வினர்.!
X

ThangaveluBy : Thangavelu

  |  31 May 2021 3:35 AM GMT

இந்திய பிரதமராக மோடி பதவியேற்று 7 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பாஜகவினர் தங்களின் உற்சாகத்தை, பொதுமக்களுக்கு மருத்துவ உதவிகள் மற்றும் உணவுகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், தமிழகத்திலும் பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மருத்துவ உதவிகள் மற்றும் உணவுகளை பொதுமக்களுக்கு வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் தெற்கு ஒன்றிய பாஜக சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசங்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய பொதுச்செயலாளர் குழந்தை செந்தில் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகியும் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியருமான ராஜேந்திரன் மாவட்ட வர்த்தகர் அணி செயலாளர் முத்து, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கணேசன், நிர்வாகிகள் வடமலை வெங்கடேசன், தவடன், குப்புசாமி, செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News