பா.ஜ.க மாவட்ட தலைவர்களுடன் ஆன ஆலோசனைக் கூட்டம்: அண்ணாமலை தலைமை!
பா.ஜ.க மாவட்ட தலைவர்களுடன் ஆன ஆலோசனைக் கூட்டம் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெறுகிறது.
By : Bharathi Latha
நடைபெறும் பாராளுமன்ற தேர்தலை ஒட்டி பாரதிய ஜனதா கட்சி தீவிரமாக களம் இறங்கி வருகிறது. பா.ஜ.க மாநில தலைமையகமான கமலாலயத்தில் இன்று பத்து மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறுகின்றது. அ.தி.மு.க கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சி நாடாளுமன்ற தேர்தலில் குறிப்பிடத்தக்க அளவிலான வெற்றி பெற வேண்டும் களம் இறங்கி இருக்கிறது. மேலும் இந்த அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த மாநில தலைவர்கள் மற்றும் முன்னணி நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டத்தில் இது பற்றி விவாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே டெல்லியில் பிரதமர் மோடி, பா.ஜ.க தலைவர் நட்டா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டத்தில் இது பற்றி விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் வெற்றி பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. டெல்லியில் நடந்த இந்த தேர்தலில் தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை, மாநில நிர்வாகி ஆன கேசவ விநாயகம் வானதி சீனிவாசன் ஆகியோருடன் பங்கேற்றார்.
இந்த நிலையில் மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் பா.ஜ.க மாவட்ட தலைவர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பட செய்து இருக்கிறார். டி நகரில் உள்ள பா.ஜ.க மாநில தலைமையகமான கமலாலயத்தில் இந்த கூட்டம் 10 மணிக்கு வியாழக்கிழமை நடைபெறுகிறது. மேலும் அ.தி.மு.க கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சி நாடாளுமன்ற தேர்தலில் குறிப்பிடத்தக்க அளவிலான வெற்றி பெற வேண்டும் என்று கணக்கு போட்டு வைத்துள்ளது. இது தொடர்பான வியூகத்தை வகுப்பது குறித்த இந்த கூட்டத்தில் விரிவான அண்ணாமலை ஆலோசனை நடத்த உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: Maalaimalar