Kathir News
Begin typing your search above and press return to search.

தஞ்சை மாணவி இறப்பு விவகாரத்தை கையில் எடுத்த பா.ஜ.க'வின் தேசிய தலைமை! இனி யவரும் தப்ப இயலாது!

தஞ்சை மாணவி இறப்பு விவகாரத்தை கையில் எடுத்த பா.ஜ.கவின் தேசிய  தலைமை! இனி யவரும் தப்ப இயலாது!
X

DhivakarBy : Dhivakar

  |  27 Jan 2022 9:53 AM GMT

தஞ்சை மாணவி இறப்பு குறித்து விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய நான்கு பேர் கொண்ட குழு அமைத்தது பா.ஜ.க'வின் தேசிய தலைமை.


தஞ்சையில் தூய இருதய மேல்நிலைப்பள்ளி என்ற கிறிஸ்தவ பள்ளியில் பயின்று வந்த இந்து மாணவியை, அப்பள்ளி நிர்வாகம் கட்டாய மதமாற்றத்திற்க்கு வற்புறுத்தியதால், அம் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பேசுபபொருளாகியுள்ளது. "உயிரிழந்த மாணவிக்கு நீதி வேண்டும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்" என்றும் பலரும் தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.


"தற்கொலை செய்துகொண்ட தஞ்சை மாணவிக்கு நீதி வேண்டியும், இவ்வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும்" போன்ற கோரிக்கைகளை முன்வைத்து, தமிழக பா.ஜ.க கடந்த 25ஆம் தேதியன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தை அரங்கேற்றியது. இந்து முன்னணி அமைப்பும் பல்வேறு போராட்டங்களை அரங்கேற்றி வருகிறது.


நாளுக்கு நாள் தஞ்சை மாணவி தற்கொலை விவகாரம் தீவிரமடைந்து வரும் நிலையில், பா.ஜ.க'வின் தேசியத் தலைமை இப்பிரச்சனையை கையில் எடுத்துள்ளது. பா.ஜ.க தேசிய தலைவர் திரு ஜே.பி நட்டா'வின் ஆணைக்கிணங்க நான்கு பேர் கொண்ட குழு அமைத்து, இப்பிரச்சனையின் தீவிரத்தை ஆராய்ந்திட , இச் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று ஆய்வும், விசாரணையும் செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இக்குழுவில் இருப்பவர்களின் பெயர்கள் பின்வருமாறு:

திருமதி. சந்தயா ராய் ( பாராளுமன்ற உறுப்பினர் மத்திய பிரதேசம்)

திருமதி. விஜயசாந்தி (தெலுங்கானா).

திருமதி. சித்ரா தாய் வாங் (மகாராஷ்டிரா).

திருமதி. கீதா விவேகானந்தா (கர்நாடகம்).

Next Story
கதிர் தொகுப்பு
Trending News