ஜல்ஜீவன் திட்டத்தில் தி.மு.க அரசின் மிகப்பெரிய ஊழலை ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் ஆதாரங்களுடன் விளக்கிய அண்ணாமலை - அடுத்து என்ன?
ஜல் ஜீவன் திட்டத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளதாக கவர்னரிடம் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை புகார்.
By : Bharathi Latha
இன்று தமிழக கவர்னர் R.N. ரவியை பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மற்றும் பா.ஜ.க முக்கிய தலைவர்கள் ஆகியோருடன் சென்று சந்தித்தார். குறிப்பாக தமிழகத்தில் தி.மு.க ஆட்சியில் பல்வேறு திட்டங்களின் கீழ் ஊழல் நடந்து வருவதாகவும், மேலும் தமிழகத்தில் நடக்கும் பல்வேறு பிரச்சனைகள் குறித்தும் புகாரை அளித்து இருக்கிறார்.மேலும் இது பற்றி பத்திரிகையாளர்களுக்கு பேட்டியின் போது கூறுகையில், மற்ற மூத்த தலைவர்களுடன் இன்று நாங்கள் தமிழகத்தின் மாண்புமிகு ஆளுநரை சந்தித்தோம்.
பிரதமர் அவர்கள் தமிழகத்திற்கு வருகை தரும் பொழுது பாதுகாப்பு நடவடிக்கைகளில் மோசமான குறைபாடு இருந்ததாகவும் அது தொடர்பாக புகார் அளிக்கப் பட்டதாகவும் கூறி இருக்கிறார். பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஜூலை 28 மற்றும் 29ஆம் தேதி சென்னைக்கு வருகை தந்த பொழுது பாதுகாப்பில் குறை இருந்ததாகவும் கூறப்பட்டு இருக்கிறது. ஜல்ஜீவன் மிஷின் திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டம், விழுப்புரம் குடிநீர் வழங்கும் திட்டத்தில் 100 குழாய்கள் இணைப்பதில் 40 முதல் 60 குழாய் இணைப்புகளில் ஊழல் நடந்து இருப்பதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்.
மிக மோசமான விஷயம் என்னவென்றால், அதை இப்போது தமிழக அரசு மறைக்க முயல்கிறது. மாநில அரசின் தவறுக்கான ஆதாரங்களுடன் எங்களுடைய குறிப்பாணையை கவர்னரிடம் கொடுத்து இருக்கிறோம். தமிழகத்தில் தி.மு.க ஆட்சியில் யாரும் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரியவில்லை. நமது மாநிலத்தில் ஜல் ஜீவன் அமலாக்கத்தில் பெருகிவரும் ஊழல்கள் குறித்தும், இந்த விவகாரத்தில் சுதந்திரமான தணிக்கைக்கு கோரிக்கை விடுத்துள்ளதாகவும்" பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்கள் குறிப்பிட்டு இருக்கிறார்.
Input & Image courtesy: Twitter