தி.மு.க ஊழலின் உதாரணமாக மொய் விருந்து - பா.ஜ.க தலைவர் அண்ணாமலை
தி.மு.கவின் விஞ்ஞான பூர்வமாக ஊழல் நிறைந்த திறமை தான் மொய் விருந்திற்கு உதாரணம் என்று அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
By : Bharathi Latha
கடந்த சில நாட்களுக்கு முன்பு தி.மு.க MLAவின் வீட்டு விழாவில் மொய் பணம் மட்டும் சுமார் 11 கோடி வசூலாக இருப்பதாக பல்வேறு தரப்பிலிருந்து வைரலான செய்தி வெளிவந்தது. ஆனால் இதில் காது குத்தப்பட்டது தி.மு.க MLA பேரக் குழந்தைகளுக்கா? அல்லது வருமானத் துறைக்கா? என்று தெரியவில்லை. இது முற்றிலும் அவர்களுடைய ஊழல் திறமையை தான் வெளிக் காட்டுகிறது என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார். ஏனெனில் வாழ்வதற்கு வழி இல்லாமல், பணம் மூட்டையில் சிக்கி தவிப்பவர்கள் வட்டிக்கு பணம் வாங்காமல் வாழ்விலேயே மீண்டும் வர கடைசி வாய்ப்பு என்பது மொய் விருந்து நடத்துவது. அப்படித்தான் தமிழகத்தில் பல்வேறு மொய் விருந்துகள் நடைபெற்று வருகிறது.
ஆனால் தஞ்சாவூர் மாவட்டம் பேராறுடி தி.மு.க எம்.எல்.ஏ நடத்திய பொய் விருந்தில் 11 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்யப்பட்டிருப்பது எப்படி மொய் விருந்தாக கருதுவது? தன்னுடைய சுய லாபத்திற்காக மொய்க்கான ஏற்பாடுகளை அவர் செய்துள்ளார். இந்த மொய் விருந்தில் மட்டும் பணம் வாங்குவதற்கு 40 மொய் வாங்கும் கவுண்டர்கள், கட்டு கட்டாக பணம் வருவதை எண்ணிப் பார்ப்பதற்கு பணம் எண்ணுவதற்கு இயந்திரம், அதனை உடனடியாக வங்கிக் கணக்குகளில் செலுத்துவதற்காக வங்கி அதிகாரிகள் என்று ஏற்கனவே திட்டமிட்டது போல் பல்வேறு செயல்களில் இறங்கி இருக்கிறார்கள்.
இந்த விருந்திற்கு வந்தவர்கள் சுமார் 1000 ரூபாயில் இருந்து தொடங்கி 5 லட்சம் வரை அவரவர் வசதிக்கு ஏற்ப மொய் வைத்துள்ளார்கள். அங்குதான் நிற்கிறது தி.மு.கவின் விஞ்ஞான பூர்வமான ஊழல் திறமை 2 லட்சத்திற்கு மேல் காசோலையாக தான் பயன்படுத்த வேண்டும் என்று வங்கிகள் கூறுகின்றன. ஆனால் 5 லட்சம் வரை இவர்கள் காசுகளாக பணத்தை வீட்டில் பதுக்கி வைத்திருக்கிறார்கள். வங்கியில் 50 ஆயிரத்திற்கு மேல் செலுத்த வருமான வரி அதாவது பான் நம்பரை நாம் கொடுக்க வேண்டும். ஆனால் இவர்களிடமிருந்து குவியும் கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற வேண்டும் என்று இப்படிப்பட்ட விருந்துகளை ஏற்பாடு செய்திருக்கிறார்கள் என்று அண்ணாமலை அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்.
Input & Image courtesy: News