பா.ஜ.க தலைவர் பேசியது போல் பரவும் டப்பிங் ஆடியோ -தவறான தகவல் பரப்புவது யார்?
பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மற்றும் மதுரை மாவட்ட பா.ஜ.க நிர்வாகி பேசுவது போல் வெளியான ஆடியோ.
By : Bharathi Latha
தற்போது இருக்கும் கால கட்டங்களில் ஒருவரை நமக்கு சாதகமாக நல்லவராகவும் மாற்றிக் கொள்ள முடியும். அதை நேரத்தில் அவர்களை நமக்கு எதிராகவும் மாற்றிக் கொள்ள முடியுமா? அதை தற்போது நிரூபித்து இருக்கிறார்கள் தி.மு.கவை சேர்ந்தவர்கள். ஆம், தற்போது பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் பேசியது போன்று தவறான டப்பிங்,மிமிக்ரி செய்யப்பட்ட ஆடியோ சமூக வலைதளங்களான ட்விட்டர், பேஸ்புக், யூடியூப் போன்றவற்றில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் இது முழுக்க முழுக்க போலியாக சித்தரிக்கப்பட்ட வீடியோ என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக கூடுதல் பொறுப்பை வகுத்து வரும் மதுரை புறநகர் மாவட்ட தலைவர் சுசீந்திரம் அவர்கள் பா.ஜ.க நிர்வாகிகளுடன் மதுரை கமிஷனர் அவர்களிடம் மனு போன்றே கொடுத்துள்ளார். இதை யார் உருவாக்கினார்கள்? எந்த நோக்கத்திற்காக அவர்கள் இதனை வெளியிட்டு இருக்கிறார்கள்? என்பதை விரைவில் கண்டுபிடித்து தருமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மக்களிடம் இருக்கும் பா.ஜ.க தன்னம்பிக்கையை போக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக இது தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.
Source: Twitter
இது பற்றி மேலும் கூறுகையில், வேண்டுமென்று அரசியல் செய்வதற்காக தான் மாநில தலைவர் கூறியதாகவும், முன்னாள் மதுரை மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் அவர்கள் தன்னை நல்லவர் என்று சித்தரித்துக் கொள்வதற்காகவும் இது உருவாக்கப்பட்டதாக தெரிகிறது. விரைவில் இதை யார் செய்தார்கள்? அவர்கள் உடனடியாக கைது செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
Input & Image courtesy: Twitter