பள்ளி விவகாரத்தில் உள்நோக்கத்தோடு செயல்பட்டால் ஆட்சி கலைப்பு: பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியசுவாமி எச்சரிக்கை.!
சென்னையில் இயங்கி வரும் பத்மா சேஷாத்திரி பள்ளி விவகாரத்தில் நியாயமான விசாரணையை அரசு மேற்கொள்வதற்கு தடை இல்லை. ஆனால் உள்நோக்கத்தோடு செயல்பட்டால் திமுக அரசை கலைப்பதை தவிர வேறு வழியில்லை என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசுவாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

By : Thangavelu
சென்னையில் இயங்கி வரும் பத்மா சேஷாத்திரி பள்ளி விவகாரத்தில் நியாயமான விசாரணையை அரசு மேற்கொள்வதற்கு தடை இல்லை. ஆனால் உள்நோக்கத்தோடு செயல்பட்டால் திமுக அரசை கலைப்பதை தவிர வேறு வழியில்லை என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசுவாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது பற்றி அவர் அளித்துள்ள பேட்டியில்: சென்னை கே.கே.நகரில் இயங்கி வரும் பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர் ராஜகோபாலன் மீது பாலியல் புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து பள்ளி நிர்வாகம் அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது.
இதன் பின்னர் ஆசிரியர் கைது செய்யப்பட்டு அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவது தவறில்லை. ஆனால் குறிப்பிட்ட அந்த பள்ளிக்கு எதிராக வன்மத்தோடு சில திராவிடர் கழகங்கள் முத்திரை குத்தி வருகிறது. சமூக வலைதளங்களில் இது பற்றி கருத்துகள் வேகமாக பரவி வருகிறது. அரசு தரப்பில் இருந்து நடவடிக்கை எடுக்க முயற்சிப்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி வருகின்றனர். அது தான் தவறு.
நீண்ட இடைவெளிக்கு பின்னர் திமுகு ஆட்சிக்கு வந்துள்ளது. பெரிய மெஜாரிட்டியோடு ஒன்றும் வெற்றிபெறவில்லை. எனவே அனைத்து விஷயங்களிலும், தீர்க்கமாகவும், தெளிவாகவும் செயல்பட வேண்டும். அப்படி இல்லையெனில் ஆட்சியை கலைக்கும் சூழல் உருவாகும். அரசு இந்த விஷயத்தில் உள்நோக்கத்தோடு செயல்பட்டு பள்ளி நிர்வாகத்தை நசுக்க நினைத்தால், ஆட்சியை கலைப்பதை தவிர வேறு வழியில்லை. கட்டாயம் அதனை செய்து காட்டுவேன் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதில் திமுகவே பின்புலமாக இருந்து செயல்படுவது தெரிகிறது. திமுக ஒன்றும் ஆட்சியை மிக சுலபமாக பிடிக்கவில்லை. ஸ்டாலின் மனைவி துர்காவின் கடவுள் வழிபாட்டால்தான் ஆட்சி பிடிக்க முடிந்தது. எனவே முதலமைச்சர் பதவியை நல்ல வழியில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
மேலும், தவறு செய்யும் ஆசிரியர் மீது நியாயமான விசாரணை நடத்துவதில் தவறில்லை. ஆனால் உள்நோக்கத்தோடு திமுக அரசு செயல்படும் என்றால் ஆட்சியை கலைப்பதற்கான அனைத்து சட்ட நுணுக்கங்களும் எனக்கு தெரியும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
