பா.ஜ.க நிர்வாகிக்கு பாதுகாப்பு வழங்குவது முறையை பின்பற்றியதா காவல் துறை? பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!
பா.ஜ.க நிர்வாகிக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்து நீதிமன்றத்தின் உத்தரவை முறையாக பின்பற்றிகிறதா காவல்துறை?
By : Bharathi Latha
மதுரை மாவட்டத்தில் பா.ஜ.க தலைவராக இருப்பவர் மகா சுசீந்திரம், இவர் தன்னுடைய உயிருக்கு மர்ம நபர்கள் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாக நடந்து இருப்பதால், 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். அவரது கோரிக்கைகளை முறையாக பரிசீலித்து உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று மதுரை காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவை போலீசார் முறையாக பின்பற்றவில்லை.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று மகா சுசீந்திரம் தன்னுடைய மனு தாக்கல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து இருந்தார். அவருடைய மனதை நீதிபதி முரளி சங்கர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் கூறும்பொழுது, மனுதாரருடைய உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பு கேட்டு ஏற்கனவே வழக்கு தொடர்ந்தபோது மனுதாரருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டு இருந்தது.
ஆனால் முறையாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பலமுறை முறையிட்டும் கோட்டின் உத்தரவை அவமதித்து இருக்கிறார்கள். இது தொடர்பாக காவல்துறை உரிய பதிலை அளிக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டு இருக்கிறார்கள். மேலும் இந்த வழக்கு விசாரணை வருகின்ற 23ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: Thanthi News