அரசு பள்ளி மாணவர்களிடமே லஞ்சம் கேட்கும் ஆசிரியர்கள்.. கொதித்தெழுந்த பாஜக..
அரசு பள்ளி மாணவர்களிடம் லஞ்சம் கேட்கும் ஆசிரியர்கள் மன்னிக்க முடியாத குற்றத்தை செய்து இருக்கிறார்கள்.
By : Bharathi Latha
தற்போது மிகப்பெரிய பிரச்சனையாக தமிழகத்தில் உருவெடுத்து இருக்கும் கோவில்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மதிப்பெண் சான்றிதழ் அளிப்பதற்காக பத்தாம் வகுப்பு மாணவர்களிடம் தலைமை ஆசிரியர் லஞ்சம் கேட்கும் சம்பவம் தான் பரபரப்பை ஏற்படுத்த இருக்கிறது. மேலும் ஆசிரியர் லஞ்சம் கேட்கும் இந்த ஒரு சம்பவம் குறித்து பாஜக தன்னுடைய கடுமையான கண்டன பதிவுகளை வெளியிட்டு இருக்கிறது. இது குறித்து பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி நேற்று அறிக்கையில் கூறும் பொழுது, "திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகில் உள்ள கோவில்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிற்சி 4 மாணவர்களிடம் தலைமை ஆசிரியர் மற்றும் இதர ஆசிரியர்கள் மாற்றுச் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் அளிப்பதற்காக ரூபாய் 500 பணமாக அல்லது A4 பேப்பர் கட்டுகள் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டு இருக்கிறார்.
இது மன்னிக்க முடியாத குற்றம், வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று பாஜக தரப்பில் கூறப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு மதிப்பெண் சான்றிதழ்களுக்கும் மாணவர்களிடம் 500 ரூபாய் கேட்டதாக குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறது. இப்படி கல்வி கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களே லஞ்சம் கேட்டால் அடுத்த தலைமுறை எப்படி தலைநிமிரும். தன் தலையை அடகு வைத்தாவது கல்வி போதிக்க வேண்டிய ஆசிரியர்கள், எதையாவது அடகு வைத்து பணத்தை கொண்டு வா! என்று மாணவர்களிடம் வலியுறுத்தியது களவாணித்தனம் அல்லவா?
அதுமட்டுமில்லாமல் படிக்கும் மாணவர்களை "எருமை மாடு" என அழைக்கும் அளவிற்கு கல்வி தகுதி இல்லாத தரம் கெட்ட ஆசிரியர்களை அரசு பள்ளிகளில் அமர்த்தியது யார்?10, 17 மார்க்குக்கு பதில் காசு கொடுத்தால், தகுதி பெற்றதாக மதிப்பெண் சான்றிதழ் கொடுக்கிறேன் என்று சொல்வது தமிழக ஆசிரியர்களின் தரம் மற்றும் கல்வி தரம் போன்றவற்றை தெளிவாகிறது. கல்வித்துறையில் தலை விரித்தாலும் லஞ்சம் மற்றும் ஊழலால் இந்த ஒரு நிலைமை. இதுதான் திராவிட மாடல் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மாணவர்களிடம் லஞ்சம் கேட்ட ஆசிரியர்களை உடனடியாக தகுதி நீக்கம் செய்து, சிறையில் அடைக்க வேண்டும். இல்லையெனில் அடுத்த தலைமுறைக்கு லஞ்சத்தில் மூழ்கி அழியும்" என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
Input & Image courtesy: Seithipunal News