Kathir News
Begin typing your search above and press return to search.

சிதம்பரத்தில் மம்தா பானர்ஜியை கண்டித்து பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்.!

பாஜக தலைமை அறிவுறுத்தலின்படி, சிதம்பரம் நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பேருந்து நிலையம் அருகே உள்ள காந்தி சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிதம்பரத்தில் மம்தா பானர்ஜியை கண்டித்து பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்.!
X

ThangaveluBy : Thangavelu

  |  5 May 2021 4:40 PM IST

பாஜக தலைமை அறிவுறுத்தலின்படி, சிதம்பரம் நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பேருந்து நிலையம் அருகே உள்ள காந்தி சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேற்கு வங்கத்தில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் குண்டர்கள் தொடர்ந்து பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் பல அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். இதனை கண்டிக்காத வகையில் மம்தா பானர்ஜி உள்ளார் என பாஜக குற்றம் சாட்டி வந்தது. இதனை கண்டிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் இன்று பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மாநில தலைவர் எல்.முருகன் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

அதன்படி சிதம்பரம் நகர பாஜக சார்பில் பேருந்து நிலையம் அருகே உள்ள காந்தி சிலை அருகில், நகரத் தலைவர் ரகுபதி தலைமையில், மாவட்டத் தலைவர் கே.பி.டி இளஞ்செழியன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்து கொண்டு மம்தா பானர்ஜிக்கு எதிராக தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News